India News

Tamil News Live Today: தென் சென்னை தொகுதி... ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி பழுதானதால் பரபரப்பு!

Thu, 09 May 2024

தென் சென்னை தொகுதி: சிசிடிவி பழுதானதால் பரபரப்பு! 

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 19 -ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று, வாக்கு இயந்திரங்கள் அந்தந்த மாவட்டங்களில் ஸ்ட்ராங் ரூம்களில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ட்ராங் ரூம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சில மையங்களில் சிசிடிவி கேமராக்களில் ஏற்பட்ட பழுது அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் தென் சென்னை மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் நேற்று நள்ளிரவு பழுதானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஸ்ட்ராங் ரூம் | சிசிடிவி கண்காணிப்பு

தென் சென்னை மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்கு இயந்திரங்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பலத்த காற்று வீசியதன் காரணமாக புதன்கிழமை இரவில் சில கேமராக்கள் பழுதடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் இன்று காலை கேமராக்கள் மாற்றப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

Read more

``பிரித்தாளும் காங்கிரஸுடனான உறவை முறித்துக்கொள்ளுமா திமுக?" - மோடியின் கேள்வியும் திமுக பதிலும்!

Thu, 09 May 2024

ஆந்திர மாநிலம் ராஜாம்பேட்டையில் நடந்த தேர்தல் பிரசார பேரணியில் பேசிய பிரதமர் மோடி,``காங்கிரஸ் தலைவர்கள் பிரித்தாளும் எண்ணங்கள் கொண்டுள்ளனர். நாட்டை துண்டு துண்டாகப் பார்ப்பது காங்கிரஸின் மனநிலை. காங்கிரஸ் வடகிழக்கு மக்கள் சீனர்கள் போலவும், தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் நினைக்கிறார்கள். அப்படித்தான் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்திருக்கிறார். இதுபோன்ற கருத்துக்களை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?

இது சரியா? தமிழ் கலாசாரம் பற்றி பேசும் தமிழக முதல்வருக்கு, தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்திற்காக காங்கிரஸுடனான உறவை துண்டிக்க தைரியம் இருக்கிறதா?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

மோடி

இதற்கு பதிலளித்த தி.மு.க செய்தி தொடர்பாளர், டாக்டர் எஸ்.ஏ.எஸ். ஹபீஸுல்லா,``காங்கிரஸின் சாம் பிட்ரோடாவின் கருத்தைப் போலவே கடந்த காலங்களில் பா.ஜ.க எம்.பி ஒருவர் தெரிவித்திருந்தார். ஆனால் பிரதமர் மோடி அப்போது எதுவும் கூறாமல் மௌனித்திருந்தார். இப்போது அதே உதாரணத்தை காங்கிரஸ் தெரிவிக்கும்போது மட்டும் விமர்சிக்கிறார். சீனர்கள், பிரிட்டிஷ், ஆப்பிரிக்கர்களுடன் இந்தியர்களை ஒப்பிட்டுப் பேசிய சாம் பிட்ரோடாவின் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது.

என்றாலும், இந்த ஒப்பீடு என்பது stereotype (ஒரு குறிப்பிட்ட வகை மக்களைப் பற்றிய பொதுவான நம்பிக்கை) ஆனால், அவர் பன்முகத்தன்மை குறித்து அவர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது... இந்தியர்களாகிய நாம் வெவ்வேறு இனக்குழுக்களை சேர்ந்தவர்கள். ஒன்றிணைந்து இந்தியா என்ற ஒரு பெரிய தேசத்தை உருவாக்கியிருக்கிறோம் என்பது உண்மைதான். அதைத்தான் நாங்கள் நம்புகிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஸ்டாலின் ராகுல்காந்தி

இதற்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ்,``இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்குவதற்காக சாம் பிட்ரோடா அளித்த ஒப்புமைகள் மிகவும் துரதிர்ஷ்டவசமானவை, ஏற்றுக்கொள்ள முடியாதவை. இந்த ஒப்புமைகளிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் முற்றிலும் விலகிக் கொள்கிறது" என விளக்கமளித்தது குறிப்பிடதக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

Read more

விவசாயிகளுக்கான மின் விநியோகம்: 'தங்கம் தென்னரசு vs அன்புமணி' - என்னதான் நடக்கிறது?!

Thu, 09 May 2024

சமீபத்தில் பா.ம.க தலைவர் அன்புமணி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதும் வேளாண்மை மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 24 நேரமும் மும்முனை மின்சாரம் வழங்குவதில் தமிழ்நாடு மின்சார வாரியம் படுதோல்வி அடைந்து விட்டது. விவசாயிகளுக்கு 24 மணி நேரம் மின்சாரம் வழங்க வேண்டியது மின்சார வாரியத்தின் கடமை என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதை செயல்படுத்த மின்வாரியம் மறுப்பது ஆணையத் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். காவிரி பாசன மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிலும் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப் படுவதில்லை என்பதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது" என்றார்.

தங்கம் தென்னரசு

பின்னர் தமிழக மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "கடந்த ஆட்சியில் டெல்டா பகுதியில் 12 மணி நேரமும், பிற பகுதிகளில் 9 மணி நேரமும் மட்டும்தான் மும்முனை மின்சாரம் இருந்தது. அந்த நிலையினை மாற்றி கடந்த 2021 முதல் விவசாயத்துக்கான மும்முனை மின்சாரம் நாள் ஒன்றுக்கு 12 முதல் 16 மணி நேரம் வரை தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இதன்பயனாக விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில், 1,50,000 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், ஒரு சில பகுதியில் உயரழுத்த மின் கட்டமைப்புகளில் அவ்வப்போது சில இடையூறுகள் ஏற்படுகிறது. இதை நிவர்த்தி செய்து டெல்டா மாவட்ட விவசாய மின் இணைப்புகளுக்கு இன்னும் அதிகப்படியான மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கிட தேவையான அனைத்து மேம்பாட்டு பணிகளும், போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என பதிலளித்து இருந்தார்.

இதற்கு பதிலளித்த அன்புமணி, "மின்துறை அமைச்சரின் அறிக்கை முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும். அமைச்சரின் அறிக்கை வெளியான பிறகு உழவர்கள் பலரை தொடர்பு கொண்டு மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறதா என்று விசாரித்தேன். அதற்கு, 'கடந்த காலங்களில் இருந்த அதே நிலைமை தான் இப்போதும் நீடிப்பதாகவும், தொடர்ச்சியாக 3 மணி நேரம் கூட மும்முனை மின்சாரம் வழங்கப்படவில்லை' என்றனர். பெரும்பான்மையான கிராமப்பகுதிகளில் மின்னழுத்தக் குறைபாடு தொடர்கிறது.

மின்தடை

தமிழகத்தில் கடந்த இரு மாதங்களில் எந்தெந்த பகுதிகளில், எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை விவசாயத்துக்கு தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். பிறகு அந்தந்த பகுதிகளில் உள்ள உழவர்களிடம் வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உண்மைதானா என்பதை கேட்டறியும் கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதற்கு தமிழக அரசு தயாரா?. தமிழகத்தின் தலைநகரான சென்னையின் அதிகபட்ச மின் தேவை 4590 மெகாவாட்டாக அதிகரித்திருக்கிறது. சென்னையின் மின் தேவையை நிறைவேற்றும் அளவுக்குக்கூட மின்னுற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு அடையவில்லை என்பது தான் உண்மை" என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மின் விநியோகத்தில் என்னதான் நடக்கிறது என்பது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமியிடம் பேசினோம், "தமிழ்நாடு முழுவதும் தங்குதடையற்ற, 24 மணி நேர மும்முனை மின்சாரத்தை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை தமிழ்நாட்டில் உள்ள விவசாய சங்கங்கள் தொடர்ந்து வைத்து வந்தனர், இதையடுத்து கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் 24 மணி நேர மும்முனை மின்சாரத்தை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. அதோடு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஈசன் முருகசாமி

ஆனாலும் இதுவரை அந்த உத்தரவை மின்சார வாரியம் அமல்படுத்தாமல், கிராமப் பகுதிகளையும், விவசாயிகளையும் வஞ்சித்து வருகிறது. இரவு நேரத்தில் இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை தொடர்ந்து எட்டு மணி நேரம் கிராமப் பகுதிகளுக்கு விவசாயிகளுக்கு வழங்கி வந்த மும்முனை மின்சாரம், தேர்தலுக்குப் பின்பு 5 மணி நேரம் குறைக்கப்பட்டு, மூன்று மணி நேரம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கடுமையான இந்த வறட்சி காலத்தில், விவசாயிகள் தண்ணீர் பாய்ச்ச முடியாமல், கடுமையான மகசூல் இழப்பை எதிர்கொண்டு உள்ளார்கள். தேர்தல் வரை இல்லாத பிரச்னை, தேர்தல் முடிந்ததும் தமிழ்நாடு மின்சார வாரியம் மின்சார தட்டுப்பாட்டை சரி செய்வதற்காக கிராமங்களையும், விவசாயிகளையும் பழிவாங்கி வருகிறது. அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்" என்றார்.

கோடை காலத்தில் விவசாயிகளுக்கு மின்சாரம் மிகவும் அத்தியாவசியம். போதுமான தண்ணீர் பாய்ச்ச முடியாமல் போனால் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு அரசாங்கம் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

Read more

``இனி ஆவினையும், அரசையும் நம்பி பலனில்லை; அமுல் வந்தால் வரவேற்போம்!" - பால் முகவர்கள் சங்கம் அதிரடி

Thu, 09 May 2024

குஜராத்தை சேர்ந்த அமுல் நிறுவனத்தின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், அமுல் நிறுவனத்தை தமிழகத்தில் வரவேற்பதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவின் பால்

இதுகுறித்து இச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி விடுத்துள்ள அறிக்கையில், "கூட்டுறவு பால் நிறுவனங்களுக்கெல்லாம் முன்னோடி நிறுவனமாக திகழ்ந்து இந்தியாவில் தொடர்ந்து முதலிடம் பிடித்து செயல்பட்டுவரும் அமுல் நிறுவனம், அதன் பால் மற்றும் பால் பொருட்களை தமிழகத்தில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சந்தைப்படுத்த ஏதுவாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் பால் பண்ணை அமைத்து வருவதாக ஒருசில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி தவறானதாகும்.

அமுல் நிறுவனத்தைப் பொறுத்தவரை பால் பவுடர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு வகையான பால் உபபொருட்களை அண்டை மாநிலங்களில் உற்பத்தி செய்து ஏற்கனவே தமிழ்நாட்டில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக சந்தைப்படுத்தி வரும் சூழலில் அவற்றோடு தற்போது கூடுதலாக 140 கிராம் மற்றும் 450 கிராம் அளவுள்ள தயிர் பாக்கெட்டுகளை ஆந்திராவின் சித்தூர் மாவட்டம், பலமனேரி எனுமிடத்தில் உள்ள பண்ணையிலிருந்து உற்பத்தி செய்து ஆந்திரா, தமிழ்நாடு எல்லையோர மாவட்டங்களில் சந்தைப்படுத்தி வருகிறது.

பொன்னுசாமி

ஊடகங்களில் வெளியாகியுள்ளதுபோல் தமிழ்நாட்டில் பால் பண்ணை அமைத்து, பால் வணிகத்தில் ஈடுபடும் எண்ணம் அமுல் நிறுவனத்திற்கு இருக்குமானால் அதனை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் வரவேற்க தயாராக இருக்கிறது.

ஏனெனில் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் தமிழ்நாட்டில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்களை காக்கும் கவசமாக இருக்கும் என்கிற நம்பிக்கையில் கடந்த காலங்களில் அமுல், நந்தினி உட்பட மற்ற மாநில கூட்டுறவு பால் நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்குள் பால் கொள்முதல் மற்றும் பால் விற்பனை சந்தைக்கான கட்டமைப்புகளை உருவாக்குவதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடுமையாக எதிர்த்து ஆவின் நிறுவனத்திற்கு அரணாக நின்று செயல்பட்டது.

அதனடிப்படையிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமுல் நிறுவனத்தின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியதை எவரும் மறந்திருக்க மாட்டார்கள்.

ஆனால், ஆவின் மற்றும் பால்வளத்துறையில் பணியாற்றும் அதிகாரிகளாகட்டும், பால்வளத்துறை அமைச்சர்களாக வருபவர்களாக இருக்கட்டும் ஆவினை சுரண்டுவதிலேயே குறியாக இருப்பதோடு, அதனை தடுக்கத் தவறி, பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்களின் உழைப்பை வீணடிக்கும் செயலுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை போய் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு செயல்பட்டு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்களின் வாழ்வாதாரம் குறித்து சிறிதும் அக்கறை கொள்ளாமல் வெற்று விளம்பரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வருவதால் இனியும் ஆவினையும், தமிழ்நாடு அரசையும் நம்பி பலனில்லை என்கிற முடிவிற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வந்திருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் - அமுல் நிறுவனம்

எனவே தமிழ்நாடு முழுவதும் சேவை சார்ந்த தொழிலான பால் விநியோகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்களுக்கு தனியார் பால் நிறுவனங்களுக்கு இணையான வருமானத்தையும், பொதுமக்களுக்கு தரமான பால் மற்றும் பால் பொருட்களின் தங்குதடையற்ற விநியோகத்தையும் அளிப்பதோடு, பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலுக்கு நியாயமான கொள்முதல் விலையும், அதற்கான தொகையை நிலுவையின்றியும் வழங்கிட முன் வர அமுல், நந்தினி உள்ளிட்ட எந்த ஒரு கூட்டுறவு பால் நிறுவனங்கள் தயாராக இருந்தாலும் அவற்றுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்க தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் தயாராக இருக்கிறோம் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஆவின் நிறுவனத்திற்கு போட்டியாக அமுல் நிறுவனம் பால் விற்பனை தொடங்க உள்ளதாக வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அமுல் நிறுவனம் தற்போது வரை பால் பண்ணையை அமைக்கவில்லை என்றும் அமுல் நிறுவனம் பால் விற்பனையை தற்போது வரை தமிழகத்தில் தொடங்கவில்லை என்றும் பால்வளத்துறை கூறியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

Read more

கார்ட்டூன்: விஷங்கள்..!

Wed, 08 May 2024
கார்ட்டூன்: விஷங்கள்..!
Read more

தனியார் கோயில் வழக்கில் ஹனுமனையும் ஒரு தரப்பாக்கிய நபர்... ரூ.1 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்!

Wed, 08 May 2024

டெல்லி உத்தம் நகர் பகுதியில் தனியார் இடத்தில் ஹனுமன் கோயில் ஒன்று இருக்கிறது. கோயில் அமைந்திருக்கும் தனியார் நிலத்தின் உரிமையாளர் மற்றும் கோயிலைக் கட்டி நிர்வகித்து வருபவர் ஆகிய இரண்டு பேரும் கடந்த ஆண்டு நிலத்தின் உரிமை தொடர்பாக டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். விசாரணையில், இரு தரப்பும் நிபந்தனைகளின் அடிப்படையில் சமாதானமாகச் செல்ல வேண்டும் எனவும், கோயிலைக் கட்டியவருக்கு நிலத்தின் உரிமையாளர் 11 லட்ச ரூபாய் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

ஹனுமன்

ஆனால், கோயிலைக் கட்டியவருக்கு ஆறு லட்ச ரூபாய் மட்டுமே அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த நபர் நிலத்தை ஒப்படைக்கவில்லை. பின்னர், நில உரிமையாளர் விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறார். அப்போது மூன்றாம் தரப்பினராக அங்கித் மிஸ்ரா என்பவர் ஆட்சேபனை மனு ஒன்றைத் தாக்கல் செய்கிறார். இருப்பினும், இந்த மனு விசாரணை நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த அங்கித் மிஸ்ரா, `ஹனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நிலத்தில் இந்த பொதுக் கோயில் இருக்கிறது. எனவே, இந்த நிலம் ஹனுமனுக்குச் சொந்தமானது. மேலும், சட்டத்தில் கடவுள் மைனர் நிலையில் இருப்பதால், ஹனுமனின் பாதுகாவலராக நான் இந்த ஆட்சேபனையைப் பதிவு செய்கிறேன்" என்று தனது மனுவில் தெரிவித்தார். இந்த நிலையில் அங்கித் மிஸ்ரா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நேற்று முன்தினம் (ஏப்ரல் 6) டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

டெல்லி உயர் நீதிமன்றம்

அப்போது இதனை நீதிபதி சி.ஹரிசங்கர் தலைமையிலான தனி நீதிபதி அமர்வு, ``கடவுள் ஒரு நாள் என் முன் வழக்காடுவார் என்று நான் நினைக்கவே இல்லை. எனினும் இது அதிர்ஷ்டவசமாக, பினாமி மூலம் தெய்வீக வழக்காகத் தோன்றுகிறது. ஒரு தனியார் நிலத்தில் கட்டப்பட்டுள்ள தனியார் கோயிலில் பொதுமக்கள் வழிபடுவதால், அது பொது கோயிலாக மாறி விடாது. கோயிலின் உரிமையாளர், அத்தகைய உரிமையை வழங்காத வரையில் அது தனியார் கோயில்தான். மேலும், தனியார் கோயில் கட்டப்பட்ட நிலம் கடவுளுக்கு சொந்தமானது அல்ல. பொதுமக்கள் அங்கு இலவசமாக வழிபாடு செய்ய அனுமதியுண்டு என்பது மட்டுமே அதன் சாராம்சம்.

தற்போதைய வழக்கில், `ஒரு நபர் மற்றொருவரின் சொத்தை அபகரித்து, அதில் கோயில் கட்டலாம், பொதுமக்களை எப்போதாவது வழிபட அனுமதிக்கலாம், மேலும் சொத்துகளை அதன் உரிமையாளருக்கு நிரந்தரமாக மீட்டெடுக்கத் தடை செய்யலாம்' என்ற நிலையே இருக்கிறது. இத்தகைய கேவலமான நடைமுறையை அனுமதிப்பது நீதியை சவப்பெட்டியில் அடிக்கும் கடைசி ஆணியாகிவிடும்.

டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்த வழக்கில், சர்ச்சைக்குரிய நிலத்தில் இருப்பது பொதுக் கோயில் என்று குறிப்பிடுவதற்குக் காரணம் ஏதும் இல்லை. ஹனுமனுக்கு பாதுகாவலராக இருந்து மேல்முறையீடு செய்தவரின் கூற்று ஏற்றுக் கொள்ளப்படாது. எனவே, மேல்முறையீட்டாளர் ஒரு லட்ச ரூபாயை மற்ற தரப்பினருக்குச் செலுத்த வேண்டும். மேலும், ஹனுமனால் செலவுகளைப் பகிர்ந்து கொள்ள முடியாது என்பதால், அவரின் பாதுகாவலராக மனு தாக்கல் செய்த மேல்முறையீட்டாளரே முழுத் தொகையையும் செலுத்த வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

Read more

Ambani, Adani: `மோடி ஜி அச்சப்பட வேண்டாம்; அவர்களுக்கு CBI, ED-யை அனுப்புங்கள்!' - ராகுல் சவால்

Wed, 08 May 2024

ஹிண்டன்பர்க் அறிக்கை கடந்தாண்டு வெளியானபோது, விமானத்தில் பிரதமர் மோடியுடன் அதானி பயணிக்கும் புகைப்படத்தை நாடாளுமன்றத்தில் காட்டி, `உங்களுக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு?' என்று ராகுல் காந்தி கேட்டபோதுகூட அதில் கருத்து தெரிவிக்காத பிரதமர் மோடி, முதன்முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் அம்பானி, அதானி பெயரை உச்சரித்திருக்கிறார்.

ராகுல் காந்தி

அதுவும் இத்தனை ஆண்டுகளாக அதானியையும், மோடியையும் பா.ஜ.க-வின் 10 ஆண்டுக்கால ஆட்சியுடன் ஒன்றாக இணைத்து குற்றம்சாட்டிவந்த காங்கிரஸுக்கு எதிராக அதானி, அம்பானி பெயரை முன்வைத்துக் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

தெலங்கானாவில் இன்று நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் அம்பானி, அதானி பெயர்களுடன் ராகுல் காந்தியை தொடர்புபடுத்திக் கேள்வியெழுப்பிய மோடி, ``தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, அம்பானி, அதானியைப் பற்றிப் பேசுவதை ராகுல் காந்தி நிறுத்திவிட்டார். அம்பானி, அதானியிடமிருந்து எவ்வளவு தொகையைப் பெற்றுக்கொண்டு, அமைதியாக இருக்கிறார்... அம்பானி, அதானியைப் பற்றிப் பேசுவதை இரவோடு இரவாக நிறுத்திவிட்டீர்களே... உங்களுக்குள் என்ன ஒப்பந்தம்... உங்களுக்குள் ஏதோ இருக்கிறது" என்று பேசியிருந்தார்.

மோடி

இதற்கு எதிர்வினையாற்றிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்கே, ``காலம் மாறிக்கொண்டிருக்கிறது. நண்பர்கள் இனி நண்பர்கள் அல்ல. மூன்று கட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில், பிரதமர் இன்று தனது சொந்த நண்பர்களையே தாக்க ஆரம்பித்துவிட்டார். மோடியின் நாற்காலி ஆட்டம் கண்டிருப்பதையே இது பிரதிபலிக்கிறது. முடிவுகளின் உண்மையான போக்கு இதுதான்" என்று தெரிவித்தார்.

ராகுல் காந்தி

இந்த நிலையில், மோடியின் கேள்விகளுக்குத் தனது X சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ மூலம் பதிலளித்திருக்கும் ராகுல், ``மோடி ஜி பயந்துவிட்டீர்களா... அதானியும், அம்பானியும் உங்களுக்கு டெம்போவில் பணம் நிரப்பி தருகிறார்களா... இது உங்களின் சொந்த அனுபவமா... பா.ஜ.க-வின் ஊழல் டெம்போவின் 'ஓட்டுநர்' மற்றும் 'உதவியாளர்' யார் என்பது நாட்டுக்கே தெரியும். ஒன்று செய்யுங்கள், அவர்களுக்கு சி.பி.ஐ, அமலாக்கத்துறையை அனுப்பி விசாரணை மேற்கொள்ளுங்கள், அச்சப்பட வேண்டாம்" என்று சவால் விடுத்திருக்கிறார்.

Read more

வேலூர் சிஎம்சி-யில் துரை தயாநிதிக்கு 55-வது நாளாக சிகிச்சை - மீண்டும் நேரில் நலம் விசாரித்த முதல்வர்

Wed, 08 May 2024

வேலூர் சி.எம்.சி தனியார் மருத்துவமனையில், கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி காலை ஆம்புலன்ஸ் மூலமாகக் கொண்டுவரப்பட்டு அனுமதிக்கப்பட்டார் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி. ஸ்ட்ரெச்சரில்தான் சிகிச்சை பிரிவுக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது இருந்து துரை தயாநிதிக்கு பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

துரை தயாநிதி

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக கடந்த மாதம் 2-ம் தேதி வேலூர் வந்த முதலமைச்சர் ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் முதலில் சி.எம்.சி மருத்துவமனைக்குச் சென்று துரை தயாநிதியின் உடல்நிலையை கேட்டறிந்து நலம் விசாரித்தார். அப்போது, தனது அண்ணன் மு.க.அழகிரியுடனும் 20 நிமிடங்கள் பேசிவிட்டு சென்றார்.

சி.எம்.சி மருத்துவமனையில் ஸ்டாலின்

இந்த நிலையில், இரண்டாவது முறையாக இன்று மாலையும் சி.எம்.சி மருத்துவமனைக்கு திடீரென நேரில் வந்து துரை தயாநிதியின் உடல் நிலை குறித்து கேட்டறிந்துவிட்டுச் சென்றிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். முதலமைச்சருடன் அவரது மருமகன் சபரீசன், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோரும் வந்திருந்தனர். இன்றோடு சேர்த்து 55 நாள்களாக, சி.எம்.சி மருத்துவமனையில் துரை தயாநிதிக்கான சிகிச்சை தொடர்கிறது.

Read more

Prajwal Revanna: 196 நாடுகளில் தேடப்படும் பிரஜ்வல்; `Blue Corner Notice' பிறப்பித்த Interpol!

Wed, 08 May 2024

கர்நாடக மாநிலம், ஹாசன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். இம்முறையும் அதே தொகுதியில் அவர் போட்டியிட்டிருந்த நிலையில், பிரஜ்வல் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பிரஜ்வல் 400-க்கும் மேற்பட்ட பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாகவும், அது தொடர்பான 2,900-க்கும் அதிகமான வீடியோக்கள் இருப்பதாகவும், அரசியல் அரங்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சலசலப்பு ஏற்பட்டது. அதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளச் சிறப்புக் குழு அமைத்து, மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். இதற்கிடையில், பிரஜ்வல், அவர் தந்தை ஹெச்.டி.ரேவண்ணா ஆகியோர்மீது அவர்கள் வீட்டில் பணிபுரியும் பெண் ஒருவர் பாலியல் புகாரளித்தார். இது மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, தந்தை - மகன் இருவரையும் கைதுசெய்ய வேண்டும் என்று அரசியல் கட்சியினர் அழுத்தம் கொடுத்தனர்.

பிரஜ்வல் ரேவண்ணா (வலது ஓரம்)

பிரஜ்வல் விவகாரம் பூதாகரமாகவே... அவர் இந்தியாவை விட்டுத் தப்பித்து ஜெர்மனிக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் ஹெச்.டி.ரேவண்ணாவை போலீஸார் கைதுசெய்தனர். மேலும், பிரஜ்வல் ரேவண்ணாவைப் பிடிக்க லுக் அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டது. தேர்தல் சமயத்தில் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரத்தில், பிரஜ்வல் மீது ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்தக் கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், பிரஜ்வல் மீது ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகக் கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்திருக்கிறார். ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்குத் தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடிக்க இன்டர்போல் உதவியை நாடும் `ப்ளூ கார்னர் நோட்டீஸ்' என்றால் என்னவென்று, காவல்துறை உயரதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.

``இன்டர்போல் என்பது சர்வதேச அளவில் குற்றங்களைத் தடுக்கும் சர்வதேச காவல்துறை அமைப்பாகும். இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள 180-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த அமைப்பில் உறுப்பினராக இருக்கின்றன.

இன்டர்போல்

இன்டர்போலை பொறுத்தவரைச் சிவப்பு, மஞ்சள், நிலம், கறுப்பு, பச்சை, ஆரஞ்சு, பர்புல் என பல்வேறு நிறங்களில் நோட்டீஸ் வழங்கப்படுவது வழக்கம். பிரஜ்வல் விவகாரத்தில் ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது. இது ஒரு வழக்கில் தேடப்படும் நபர் குறித்த தகவல், அது தேவையானவர்களுக்குக் கிடைக்க வழிவகுக்கும். உலகில் எங்கிருந்தாலும், அவரின் இருப்பிடம் எங்கே... சம்பந்தப்பட்ட நபர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பது குறித்த தகவலை விசாரணைக்குப் பகிர்ந்துகொள்ளப் பயன்படும். இதன் மூலம் தற்போது அவர் எங்கே இருக்கிறார் என்கிற தகவல் இன்டர்போல் மூலம் நம் நாட்டுக் காவல்துறையினருக்குக் கிடைத்துவிடும். அந்தத் தகவலை வைத்து, அவர்கள் மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட நபரைக் கைதுசெய்து, இந்தியாவுக்கு அழைத்து வருவார்கள்" என்றனர் விரிவாக.

Read more

Ambani, Adani: `ஆட்டம் காணும் நாற்காலி... தன் நண்பர்களையே மோடி தாக்க ஆரம்பித்துவிட்டார்!' - கார்கே

Wed, 08 May 2024

`அம்பானி, அதானி போன்ற பெரு தொழிலதிபர்களுக்காகவே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு செல்வதெல்லாம் அதானி நிறுவனங்களுக்கு ப்ராஜெக்ட் வாங்கிக்கொடுக்கவே. அதானிக்காக மோடி, மோடிக்காக அதானி' போன்ற குற்றச்சாட்டுகளைக் காங்கிரஸ் தொடர்ச்சியாக கூறிவந்தது.

ராகுல் காந்தி - Adani

அதானி தொடர்பாக ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானபோது, மோடியின் வெளிநாட்டு பயணங்களில் அதானியும் உடனிருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலில்கூட, `அம்பானி, அதானி போன்றோரின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி அரசு ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்திருக்கிறது' என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பிரசாரம் செய்துவந்தார்.

ஆனால், இதில் ஒருபோதும் பிரதமர் மோடி பெரிதாக பதில் கருத்து தெரிவித்ததாக இல்லை. இப்படியிருக்க, இந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் முதன்முறையாக அம்பானி, அதானி பெயர்களை மோடி குறிப்பிட்டிருக்கிறார்.

மோடி

மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிந்த நிலையில் தெலங்கானாவில் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்ட மோடி, ``தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, அம்பானி - அதானியைப் பற்றிப் பேசுவதை ராகுல் காந்தி நிறுத்திவிட்டார். அம்பானி - அதானியிடமிருந்து எவ்வளவு தொகையைப் பெற்றுக்கொண்டு, அமைதியாக இருக்கிறார்... அம்பானி - அதானியைப் பற்றிப் பேசுவதை இரவோடு இரவாக நிறுத்திவிட்டீர்களே... உங்களுக்குள் என்ன ஒப்பந்தம்... உங்களுக்குள் ஏதோ இருக்கிறது" என்று பேசினார்.

நரேந்திர மோடி - மல்லிகார்ஜுன கார்கே

இந்த நிலையில், மோடியின் இத்தகையப் பேச்சுக்கு தனது X சமூக வலைதளப் பக்கத்தில் எதிர்வினையாற்றியிருக்கும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ``காலம் மாறிக்கொண்டிருக்கிறது. நண்பர்கள் இனி நண்பர்கள் அல்ல. மூன்று கட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில், பிரதமர் இன்று தனது சொந்த நண்பர்களையே தாக்க ஆரம்பித்துவிட்டார். மோடியின் நாற்காலி ஆட்டம் கண்டிருப்பதையே இது பிரதிபலிக்கிறது. முடிவுகளின் உண்மையான போக்கு இதுதான்" என்று பதிவிட்டிருக்கிறார்.

Read more

Exclusive: வேகமெடுக்கும் கோவை புறவழி வட்டச்சாலை பணிகள்... கழுகுப்பார்வை காட்சிகள்!

Wed, 08 May 2024
தயாராகும் கோவை மேற்கு புறவழி வட்டச்சாலை
தயாராகும் கோவை மேற்கு புறவழி வட்டச்சாலை
தயாராகும் கோவை மேற்கு புறவழி வட்டச்சாலை
தயாராகும் கோவை மேற்கு புறவழி வட்டச்சாலை
தயாராகும் கோவை மேற்கு புறவழி வட்டச்சாலை
தயாராகும் கோவை மேற்கு புறவழி வட்டச்சாலை
தயாராகும் கோவை மேற்கு புறவழி வட்டச்சாலை
தயாராகும் கோவை மேற்கு புறவழி வட்டச்சாலை
தயாராகும் கோவை மேற்கு புறவழி வட்டச்சாலை
தயாராகும் கோவை மேற்கு புறவழி வட்டச்சாலை
தயாராகும் கோவை மேற்கு புறவழி வட்டச்சாலை
தயாராகும் கோவை மேற்கு புறவழி வட்டச்சாலை
தயாராகும் கோவை மேற்கு புறவழி வட்டச்சாலை
தயாராகும் கோவை மேற்கு புறவழி வட்டச்சாலை
தயாராகும் கோவை மேற்கு புறவழி வட்டச்சாலை
தயாராகும் கோவை மேற்கு புறவழி வட்டச்சாலை
தயாராகும் கோவை மேற்கு புறவழி வட்டச்சாலை
தயாராகும் கோவை மேற்கு புறவழி வட்டச்சாலை
தயாராகும் கோவை மேற்கு புறவழி வட்டச்சாலை
தயாராகும் கோவை மேற்கு புறவழி வட்டச்சாலை
Read more

10 ஆண்டுகளில் முதன்முறையாக அதானி, அம்பானிக்கு எதிராக மோடியின் கமென்ட்... பின்னணி என்ன?!

Wed, 08 May 2024

தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில், மூன்று கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்திருக்கிறது. இன்னும் நான்கு கட்டத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், தெலங்கானாவில் தேர்தல் பரபரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் மோடி, இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களான அம்பானி, அதானி பெயர்களை தனது உரையில் குறிப்பிட்டார்.

மோடி

தெலங்கானா கரீம்நகரில் இன்று (மே 8) பேசிய பிரதமர் மோடி, “மக்ளவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, தொழிலதிபர்கள் குறித்து அவதூறு பேசுவதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏன் நிறுத்திவிட்டார்? தொழிலதிபர்களுடன் ராகுல் காந்திக்கு ’டீல்’ என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், ‘தொழிலதிபர்கள் குறித்து பேசுவதை திடீரென ராகுல் காந்தி நிறுத்திவிட்டாரே. அம்பானி -அதானியிடமிருந்து பெரும் பணத்தை அவர் பெற்றுவிட்டாரா?’ என்றும் பிரதமர் கேள்வி எழுப்பினார்.

ராகுல் காந்தி

அதோடு, ‘காங்கிரஸ் இளவரசர் (ராகுல் காந்தி) தினமும் காலையில் எழுந்தவுடனே அம்பானி - அதானி குறித்து பேச ஆரம்பித்துவிடுவார். ரஃபேல் விவகாரம் வந்ததிலிருந்து புதிய மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பித்தார். ஐந்து தொழிலதிபர்கள், ஐந்து தொழிலதிபர்கள் என்று கடந்த ஐந்து ஆண்டுகளாக சொல்லிவந்தார். பிறகு, அம்பானி - அதானி, அம்பானி - அதானி என்று சொல்ல ஆரம்பித்தார். தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து அம்பானியையும் அதானியையும் அவதூறு செய்வதை அவர் நிறுத்திவிட்டார்’ என்று பிரதமர் மோடி விமர்சித்தார்.

இது குறித்து தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ‘தெலங்கானா மண்ணிலிருந்து ஒன்றை கேட்க விரும்புகிறேன். இந்தத் தேர்தலில், அதானி - அம்பானியிடமிருந்து இளவரசர் எவ்வளவு பெற்றார்? எவ்வளவு கறுப்புப்பணத்தை அவர் பெற்றார்? பணம் நிரப்பப்பட்ட டெம்போ வேன் காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்ததா?

அதானி - மோடி

அம்பானி - அதானி குறித்து பேசுவதை திடீரென நிறுத்தியதன் பின்னால் இருக்கும் டீல் என்ன? ஐந்து ஆண்டுகளாக, அதானியையும் அம்பானியையும் அவதூறு செய்துகொணடிருந்தீர்கள். திடீரென ஒரே இரவில் அதை நிறுத்திவிட்டீர்கள். எதையோ ஒன்றை நீங்கள் அடைந்திருக்கிறீர்கள் என்பதுதானே அதற்கு அர்த்தம். நாட்டு மக்களுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும்’ என்றார்.

கடந்த சில ஆண்டுகளாக, தொழிலபதிர் அதானியையும், பிரதமர் மோடியையும், பா.ஜ.க அரசையும் தொடர்புபடுத்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து எழுப்பி வருகிறார். ஹிண்டர்பர்க் அறிக்கை வெளியாகி இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நேரத்தில் தொழிலதிபர் கெளதம் அதானியை வெளிநாட்டுப் பயணத்தின்போது பிரதமர் மோடி அழைத்துச் சென்றார் என்று நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, அது தொடர்பாக பத்திரிகைகளில் வெளிவந்த புகைப்படத்தை ஆதாரமாகக் காண்பித்தார்.

நாராயணன் திருப்பதி

அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகைகளையும், கடன்தள்ளுபடியையும் மோடி அரசு வழங்குகிறது என்ற ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி இதுவரை பதில் அளிக்கவில்லை என்று விமர்சனம் உள்ளது.

இந்த நிலையில், அதானி - அம்பானி பெயர்களை தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி வெளிப்படையாக உச்சரித்திருப்பது தேசிய அரசியல் வட்டராத்தில் பல விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. மேலும் பலர், ``அதானி, அம்பானியிடம் கறுப்பு பணம் உள்ளது என்பதை மோடி ஒப்புகொண்டு விட்டார்” என்கிறார்கள். மேலும் பிரதமராக பதவியேற்று 10 ஆண்டுகள் ஆகும் நிலையில், இடையில் அதானி நிறுவனம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெடித்த நிலையிலும் பிரதமர் மோடி எதற்கும் பதில் அளிக்கவில்லை. ஆனால் தேர்தல் நேரத்தில் காங்கிரஸுடன் தொடர்புபடுத்திப் பேசுகிறார்,

இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க-வின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்.

“பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் இடத்திலும் பல கருத்துக்களைப் பேசிவருகிறார். உடனே, ‘பிரதமர் அப்படிப் பேசலாமா, இப்படிப் பேசலாமா?’ என்று கேள்வி கேட்கிறார்கள். பிரதமரின் பேச்சு குறித்து கேள்வி எழுப்புவது ஒரு வாடிக்கையாகவே மாறிவிட்டது. அதானி - அம்பானி குறித்து பிரதமர் என்ன பேசியிருக்கிறார்... ‘அம்பானிக்கும், அதானிக்கும் அள்ளி அள்ளிக் கொடுத்தீர்கள்’ என்று இத்தனை நாள்களாக எதிர்க்கட்சிகள் பேசிவந்தன. அந்தப் பொய்யை இப்போது ஏன் பேசவில்லை என்றுதான் பிரதமர் கேட்கிறார்.

ராகுல் காந்தி - மோடி

குறிப்பாக, நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இது பற்றி ஏன் பேசவில்லை என்ற கேள்வியை எழுப்பும் பிரதமர், அப்படியென்றால் நீங்கள் பணம் வாங்கிவிட்டீர்களா என்று கேட்கிறார். பிரதமர் கேட்பது நியாயமான கேள்வி. ‘அதானிக்கும் அம்பானிக்கும் நண்பர் என்று என்னை சொல்லிக்கொண்டிந்தீர்களே, தேர்தல் தொடங்கியதிலிருந்து அது பற்றி பேசவில்லையே. அப்படியென்றால் பணம் வாங்கிவிட்டீர்களா?’ என்று பிரதமர் கேட்கிறார்.

அதற்கு, ஆமாம் என்று சொல்லுங்கள். அல்லது இல்லை என்று சொல்லுங்கள். அதானியும், அம்பானியும் பணம் தரமாட்டார்கள் என்றும் சொல்லிவிட்டுப் போங்கள். அப்படியென்றால், இதுநாள் வரையில் நீங்கள் சொன்னதெல்லாம் பொய் தானே... இந்த உண்மையைத்தான் பிரதமர் வெளிக்கொண்டுவருகிறார்” என்கிறார் நாராயணன் திருப்பதி.

ராகுல் காந்தி

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக் அறிக்கை போல இருப்பதாக பிரதமர் மோடி விமர்சித்தார். ஓ.பி.சி இடஒதுக்கீட்டிலிருந்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் பேசினார். எனவே, முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப்பேச்சை பிரதமர் மோடி பேசிவருவதாக விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில்தான், மூன்றாம் கட்டத் தேர்தலின்போது அம்பானி, அதானி குறித்து பிரதமர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த கேள்விக்கு, “முதல் கட்டத்தின்போது என்ன பேச வேண்டும், இரண்டாம் கட்டத்தின்போது என்ன பேச வேண்டும் என்று தேர்தல் விதிமுறைகள் எதுவும் இல்லை. எதிர்க்கட்சிகள் செய்த குழப்பங்களைச் சரிசெய்ய வேண்டிய கடமை ஒரு கட்சியின் தலைவராக பிரதமருக்கு இருக்கிறது. அதற்கு தகுந்தாற் போல பிரதமர் பேசுகிறார்” என்றார் நாராயணன் திருப்பதி.

இதனிடையே இன்று தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரியங்கா காந்தி, ``இன்று நரேந்திர மோடி சொல்லி இருக்கிறார், `ராகுல் காந்தி அதானியின் பெயரை எடுக்கவில்லை’ என்று, ஆனால் உண்மை என்ன... ராகுல் காந்தி தினமும் அதானி பற்றி பேசுகிறார், தினமும் அதானி பற்றிய உண்மையை உங்கள் முன் வைத்து அம்பலப்படுத்துகிறார். பெரிய தொழிலதிபர்களுடன் நரேந்திர மோடிக்கு தொடர்பு இருப்பதாக ராகுல் காந்தி தினமும் உங்களிடம் கூறுகிறார்.

பிரியங்கா காந்தி

நரேந்திர மோடி தனது நண்பர்களின் ரூ.16 லட்சம் கோடியை தள்ளுபடி செய்தார். ஆனால் விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் கூட தள்ளுபடி செய்யவில்லை. இதற்கு நரேந்திர மோடி பதில் சொல்ல வேண்டும்” என்றிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

Read more

அரசியல் களத்திலும் விவாதமாக வெடித்த கேரள பெண் மேயர் - பஸ் டிரைவர் மோதல்... தொடரும் சர்ச்சை!

Wed, 08 May 2024

திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன், தனது கணவர் சச்சின் தேவ் எம்.எல்.ஏ மற்றும் குடும்பத்தினருடன் காரில் சென்றபோது கே.எஸ்.ஆர்.டி.சி பஸ் டிரைவர் யதுகிருஷ்ணா ஆபாச சைகை காட்டியதாக புகார் கூறியிருந்தார். ஆனால், பஸ்ஸை முந்திச்செல்ல முயன்றபோது வழிவிடவில்லை எனக்கூறி பஸ்ஸின் முன்பு காரை குறுக்கே நிறுத்தி தன்னிடம் ஆர்யா ராஜேந்திரனும், அவரது கணவர் சச்சின் தேவ் எம்.எல்.ஏ-வும் தகராறில் ஈடுபட்டதாக டிரைவர் யதுகிருஷ்ணா கூறினார். ஆர்யா ராஜேந்திரனுக்கு ஆதரவாக ஒரு சாராரும், யது கிருஷ்ணாவுக்கு ஒரு சாராரும் குரல் கொடுப்பதால் கேரளாவில் இந்த விவகாரத்தில் இன்னும் விவாதம் தொடர்கிறது.

நடிகை ரோஸ்னா ஆன்றோ ராய்

இதற்கிடையே நடிகை ரோஸ்னா ஆன்றோ ராய் வெளியிட்ட ஃபேஸ்புக் வீடியோவில், "ஆர்யா ராஜேந்திரனுக்கு நடந்ததுதான் எனக்கும் நடந்தது. திருச்சூர் குன்னங்குளத்தில் ரோடு வேலை நடந்தபோது யது கிருஷ்ணா பஸ்ஸை அதி வேகமாக ஓட்டி வந்து எனது காருக்கு பின்னால் தொடர்ச்சியாக ஹாரன் அடித்தபடி ஓவர் டேக் செய்தார். பஸ்ஸுக்கு பின்னால் நானும் ஹாரன் அடித்தபடி சென்றேன். அப்போது பஸ்ஸை நிறுத்திய யது கிருஷ்ணா என்னை பெண் என்றும் பாராமல் அசிங்கமாக திட்டினார். இதுபற்றி நான் பொது வெளியில் பேசினால் நீதி கிடைக்கும் என அப்போது எனக்கு தோன்றவில்லை" என்றார். நடிகை குரல் கொடுத்ததை தொடர்ந்து "நான் மட்டும் அல்ல" என தனது முகநூலில் பதிவு செய்தார் ஆர்யா ராஜேந்திரன். ஆனால், நடிகை கூறிய குற்றச்சாட்டை மறுத்துள்ளார் யது கிருஷ்ணா.

இந்த மோதலில் மேயர் ஆர்யா ராஜேந்திரன் கொடுத்த புகாரில் டிரைவர் யது கிருஷ்ணா மீது வழக்கு பதிந்துள்ளது போலீஸ். அதே சமயம் பஸ்ஸை வழிமறித்து தகராறு செய்ததாக டிரைவர் யது கிருஷ்ணா கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இதையடுத்து மேயர் ஆர்யா ராஜேந்திரன், எம்.எல்.ஏ சச்சின் தேவ் மற்றும் காரில் இருந்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேன்டும் என திருவனந்தபுரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் டிரைவர் யது கிருஷ்ணா. கோர்ட் உத்தரவுபடி ஆர்யா ராஜேந்திரன், அவரது கணவர் சச்சின் தேவ் எம்.எல்.ஏ உள்ளிட்டவர்கள்மீது ஜாமீன் இல்லாத பிரிவில் வழக்குப்பதியப்பட்டுள்ளது. விரைவில் மேயர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

சச்சின் தேவ் எம்.எல்.ஏ- மேயர் ஆர்யா ராஜேந்திரன்

இதற்கிடையே பஸ்ஸில் இருந்த சி.சி.டி.வி கேமராவின் மெமரி கார்டு காணாமல் போன விவகாரத்தின் பின்னால் மேயர் ஆர்யா ராஜேந்திரனின் அதிகார தலையீடு உள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. இதுபற்றி காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் கூறுகையில், "மெமரி கார்டு காணாமல் போன விவகாரத்தில் அரசியல் சதி உள்ளது. அரசு பஸ்ஸை வழிமறித்து, பயணிகளை இறக்கிவிட்ட மேயர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் கே.எஸ்.ஆர்.டி.சி-க்கும், போலீஸூக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேயருக்கு ஒரு நீதி, டிரைவருக்கு ஒரு நீதி என இரட்டை நிலைபாடு எடுக்கக்கூடாது" என்றார்.

கே.எஸ்.ஆர்.டி.சி பஸ் டிரைவர் யது கிருஷ்ணா

இந்த விவகாரம் அரசியல் விவாதமாக வெடித்ததை தொடர்ந்து சி.பி.எம் இளைஞர் அமைப்பான டி.ஒய்.எஃப்.ஐ மாநில செயலாளார் வி.கே.சனோஜ் ஆர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். வி.கே.சனோஜ் கூறுகையில், "ஆர்யா ராஜேந்திரன் சி.பி.எம் கட்சியை சேர்ந்தவர் என்பதால் சமூக வலைத்தளங்களிலும் அவரை வேட்டையாடுகிறார்கள். இதை தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக சிலர் கருதுகின்றனர். ஆனால், பெண்களிடம் மோசமாக நடந்துகொண்டது உள்ளிட்ட வழக்குகளில் சிக்கியவர்தான் யது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்" என்றார்.

மேயர்- பஸ் டிரைவர் மோதலில் கேரளா அரசியலில் தொடர்ந்து விவாதங்கள் எழுந்துவருகின்றன.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

Read more

`தோல் நிறத்தின் அடிப்படையில் மக்களை அவமதிப்பதா?' - Sam Pitroda சர்ச்சை பேச்சு; ராகுலைச் சாடும் மோடி!

Wed, 08 May 2024

பிரபல தொழிலதிபரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சாம் பிட்ரோடா, தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருந்தார். அப்போது அவர், ``உலகின் ஜனநாயகத்துக்கு இந்தியா ஓர் சிறந்த உதாரணம். நாட்டின் கிழக்கில் உள்ள மக்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் இருக்கிறார்கள்.

மோடி

இப்படி பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை நம்மால் ஒற்றுமையாக வைத்திருக்க முடியும்" எனக் குறிப்பிட்டார். காங்கிரஸ் தலைவரின் இந்தப் பேச்சின் வீடியோ, சமுக வலைதளங்களில் பகிரப்பட்டு, விவாதப் பொருளானது.

இந்த நிலையில், இன்று தெலங்கானாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, ``சாம் பிட்ரோடா கூறிய கருத்துக்கு நான் மிகவும் கோபமாக உள்ளேன். இந்த இனவெறி மனப்பான்மையை நாங்கள் ஏற்க மாட்டோம். என்மீது அவதூறுகள் வீசப்படும்போது என்னால் பொறுத்துக்கொள்ள முடியும், ஆனால் என் மக்கள்மீது அவதூறுகள் வீசப்பட்டால், என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.

தோலின் நிறத்தின் அடிப்படையில் ஒருவரின் தகுதியை நாம் தீர்மானிக்க முடியுமா... என் மக்களை இப்படிக் கேவலமாகப் பார்க்க, ஷேஜாதாவை (ராகுல் காந்தி) அனுமதித்தது யார்... நல்ல நற்பெயர்கொண்ட, பழங்குடியினப் பெண்ணான திரௌபதி முர்முவைப் பற்றி நான் நிறைய யோசித்திருக்கிறேன். அவரை குடியரசுத் தலைவர் தேர்தலில் தோற்கடிக்க காங்கிரஸ் ஏன் அவ்வளவு முயற்சி செய்தது... ஆனால் இன்றுதான் அதற்கான காரணம் தெரிந்து கொண்டேன், 'ஷேஜாதா'வின் தத்துவ வழிகாட்டியான (சாம் பிட்ரோடா) மாமா ஒருவர் அமெரிக்காவில் இருக்கிறார்.

ஜெய்ராம் ரமேஷ் - சாம் பிட்ரோடா

கிரிக்கெட்டில் மூன்றாவது நடுவரைப் போலவே இந்த 'ஷேஜாதா'வும் அமெரிக்காவில் இருக்கும் அந்த தத்துவ வழிகாட்டி மாமாவின் கருத்தைத்தான் ஏற்றுச் செயல்படுத்துகிறார். அவர்தான் இப்போது, `கறுப்பு தோல் கொண்டவர்கள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள்' எனத் தெரிவித்திருக்கிறார். இதைத்தான் அப்போதும் காங்கிரஸ் பிரதிபலித்திருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.

சாம் பிட்ரோடாவின் கருத்து குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ``இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்கும் வகையிலான சாம் பிட்ரோடாவின் கருத்துகள், மிகவும் துரதிஷ்டவசமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது." எனத் தெரிவித்திருக்கிறார்.

Read more

குஜராத்: ஒரே ஒரு வாக்காளர்... அவர் வாக்களித்ததும் 100% வாக்குப்பதிவான வாக்குச்சாவடி!

Wed, 08 May 2024

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், நேற்று (07/05/2024) 10 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. குஜராத்தில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்கு பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள பனேஜ் என்னும் இடத்தில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரே ஒருவர் தனது வாக்கைப் பதிவு செய்ததன் மூலம் அந்த வாக்குச்சாவடியில் 100% வாக்குப் பதிவை உறுதிசெய்திருக்கிறார். அவர் பெயர் மஹந்த் ஹரிதாஸ்.

வாக்காளர் மஹந்த் ஹரிதாஸ்

எந்த ஒரு வாக்காளருக்கும் வாக்குச் சாவடி இரண்டு கிலோமீட்டருக்கு மேல் தொலைவில் இருக்கக்கூடாது என்று தேர்தல் சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அந்த அப்டிப்படையில் ஜூனாகாத்(Junagadh) மக்களவை தொகுதிக்குட்பட்ட கிர் வனப்பகுதியில் அமைந்துள்ள, பனேஜ் கோயில் பூசாரியான மஹந்த் ஹரிதாஸ் என்பவர் வாக்களிப்பதற்காக, தேர்தல் ஆணையம் 10 பேர் கொண்ட குழுவை ஏற்படுத்தி அவர் வாக்களிக்கத் தனி வாக்குச்சாவடியையும் அமைத்தது .

வாக்காளர் மஹந்த் ஹரிதாஸ்

நேற்று, காலை 11 மணியளவில் மஹந்த் ஹரிதாஸ் வாக்களிக்க வந்தார். வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹரிதாஸ், "ஜனநாயக நாட்டில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். மேலும், ஒரு வாக்காளருக்காக 10 பேர் கொண்ட குழுவைத் தேர்தல் ஆணையம் அமைத்தது ஒவ்வொரு வாக்கும் எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுகிறது" என்று கூறினார். இதன் மூலம் வாக்குச்சாவடியில் 100 சதவீத வாக்குகளைப் பதிவு செய்துள்ளோம், என வாக்குச்சாவடி அதிகாரிகள் கூறினர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

Read more