India News

ராணிப்பேட்டை: குடிநீர் தேக்கத் தொட்டியில் கழிவுகள்; எச்சரிக்கை விடுத்த ஆட்சியர் - நடந்தது என்ன?!

Mon, 06 May 2024

ராணிப்பேட்டை, நவ்லாக் ஊராட்சி வ.உ.சி நகர் பகுதியிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைந்திருக்கிறது. இதில் இருந்து தினந்தோறும் வ.உ.சி நகர் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நீர்தேக்கத் தொட்டியின் மேல்பகுதிக்கு படிக்கட்டுகள் வழியாக நாய்கள், குரங்குகள் செல்கின்றன. இதனால், தொட்டி மீது கழிவுகள் கொட்டிக் கிடக்கின்றன. நீர் நிரம்பி மேலிருந்து கீழே வழியும்போது, கழிவுகளும் சேர்ந்து வருவதை பார்த்து அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். ‘நீர்தேக்கத் தொட்டிகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை’ எனக் குற்றஞ்சாட்டி, சமீபத்தில் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், ‘‘குடிநீர் தேக்கத் தொட்டிகள் உட்புறம், வெளிப்புறம் சுத்தமாக இல்லையெனில் பணியிடை நீக்கம் செய்யப்படுவீர்கள்’’ என்று ஊராட்சி செயலாளர்கள், டேங்க் ஆப்ரேட்டர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி.

குடிநீர் தேக்கத் தொட்டியில் கழிவுகள்

இது தொடர்பாக, ஆட்சியர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ‘‘வ.உ.சி நகர் நீர்தேக்கத் தொட்டியின்மீது கழிவுகள் இருந்த புகார்மீது நடவடிக்கை மேற்கொள்ள ராணிப்பேட்டை வருவாய்க் கோட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர்களை அனுப்பி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. உடனடியாக, ஊராட்சி செயலர் மற்றும் டேங்க் ஆப்ரேட்டர் ஆகியோரை அனுப்பியும் தொட்டியின் மேற்பகுதியை சுத்தம் செய்து, பொது மக்கள் தெரிவித்த புகாரின்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு, முழுமையாக சுத்தம் செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல், நீர்தேக்கத் தொட்டியின் கீழுள்ள சுற்றுப்பகுதியும் முழுமையாக தடுப்பு வேலிகள் அமைத்து, மேலே விலங்குகள் செல்வதை தடுக்கவும், படிக்கட்டுகளை சிறிய கதவுகள் கொண்டு பூட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பிரச்னை தொடர்பாக, அரசு விதிமுறைகளின்படி மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியினை முறையாக பராமரிக்க தவறிய சம்பந்தப்பட்ட டேங்க் ஆப்ரேட்டர், ஊராட்சி செயலர் ஆகியோர் மீது துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க ஊராட்சிகள் உதவி இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

குடிநீர் தேக்கத் தொட்டியில் கழிவுகள்

எனவே, வ.உ.சி நகர்ப் பகுதியில் அமைந்துள்ள இந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியின் மேலிருந்த விலங்குகளின் கழிவுகள் அகற்றப்பட்டுவிட்டது. மனித கழிவுகள் இருந்ததாக பரவிய செய்தி முற்றிலும் தவறானது. மாவட்ட நிர்வாகம் முறையாக ஆய்வு செய்து, இந்த பிரச்னை மீது நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. தவறான தகவல்களையும் நம்ப வேண்டாம். அதுமட்டுமல்லாமல், ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் அமைந்துள்ள தரை மற்றும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளில் உள்புறம் மற்றும் மேற்புறம் சுகாதாரமாக பராமரிக்கப்பட வேண்டும். இதையும் மீறி புகார்கள் ஏதேனும் வந்தால், சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலர்கள், டேங்க் ஆபரேட்டர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

Read more

``இந்தியா’ கூட்டணியைப் பார்த்து பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்!’ - தொல்.திருமாவளவன்

Mon, 06 May 2024

நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் மீண்டும் போட்டியிட்டார். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலுக்கான மின்னணு வாக்கு இயந்திரங்கள் அரியலூரில் உள்ள கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிடுவதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த தொல்.திருமாவளவன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலுக்கான மின்னணு வாக்கு பட்டியல் அரியலூரில் வைக்கப்பட்டுள்ளது. அதை பார்வையிடுவதற்காக வந்துள்ளேன்.

திருமா

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட இடத்தில் சி.சி.டி.வி கேமராக்கள் அரை மணி நேரம் செயலிழந்துள்ளது. இதுபற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமார் தேர்தல் அலுவலரிடத்தில் புகார் மனு அளித்துள்ளார். இதே போல, நீலகிரி, ஈரோடு பகுதிகளில் சி.சி.டி.வி கேமராக்கள் செயலிழந்துள்ளன. சந்தேகத்திற்கு இடமான சில குளறுபடிகள் நடந்துள்ளன. அரியலூரில் பாதுகாக்கப்பட்டுள்ள சிதம்பரம் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களை விடுதலை சிறுத்தை கட்சியினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். அந்தந்த தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் சி.சி.டி.வி இயந்திரங்களை கண்காணிக்க வேண்டும், பராமரிக்க வேண்டும். சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அவைகளை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

பிரதமர் மோடி அண்மை நாட்களாக பேசி வருகிற கருத்துக்கள், காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருக்கிறார் என்பதை காட்டுகிறது. அதை அவர் அவ்வப்போது வெளிப்படுத்துகிறார். அதற்கான சான்றுகள் அவரது உரைகளில் அமைந்துள்ளது. அவருடைய நிலையை மறந்து, பொறுப்பை மறந்து மிகவும் கீழிறங்கி போய் அவருடைய விமர்சனங்களை முன் வைக்கிறார். குறிப்பாக, தாலியை பறித்து இஸ்லாமியருக்கு கொடுத்து விடுவார் என்ற அளவுக்கு அவர் பேசுவது, அவரது பொறுப்புக்கு அழகல்ல. அது அவருடைய அச்சத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. அதேபோல், தொடக்கத்தில் இருந்து தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அதிர்ச்சி அளிக்கக்கூடும் வகையாக உள்ளது. இந்த பிரச்னையில் யார் மீது குற்றம் சுமத்தப்படுகிறதோ அவருக்கு விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்ப வேண்டும். அப்படி, பிரதமருக்கு அனுப்ப வேண்டிய தேர்தல் ஆணையம் அதற்கு மாறாக நட்டாவுக்கு அவர்களுக்கு அனுப்பியது ஏன் என்று விளங்கவில்லை.

பேட்டியளுக்கும் திருமாவளவன்

தேர்தல் ஆணையத்தின் இந்த அணுகுமுறை ஒரு சார்பாக இருக்கிறது. ஆளுங்கட்சிக்கு சாதகமான அணுகுமுறையாக இருக்கிறது. பிரதமரை விளக்கம் கேட்பதற்கு கூட தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. மேலும், 5 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், தேர்தல் ஆணையம் சரியாக செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். ஆந்திராவில் உள்ள நெல்லூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளேன். எங்களது வேட்பாளர்கள் ஆந்திராவில் போட்டியிடுகின்றனர். நாங்கள் போட்டியிடாத மற்ற தொகுதிகளில் நான் பிரசாரம் மேற்கொள்கிறேன். இதே போல் மகாராஷ்டிராவில் உள்ள தாராவில் போட்டியிடுகிற காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன்.

கெஜ்ரிவால்

மகாராஷ்டிராவில் லத்தூர் தொகுதியில் விடுதலைக் கட்சியின் சார்பில் வேட்பாளர் போட்டியிடுகிறார். அதேபோல், தெலங்கானாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் 7 தொகுதியில் போட்டியிடுகின்றனர். அங்கு பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறேன். மற்ற இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுகின்றன. அவர்களை ஆதரிக்கிறோம். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளபோது டெல்லி முதல்வரை கைது செய்திருப்பது சரியில்லை. ஏற்கனவே இதை சுட்டிக்காட்டி கண்டித்து இருக்கிறோம். முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் கெஜ்ரிவால் அவர்களை நேரடியாக அமலாக்கத்துறை கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.

ஹேமந்த் சோரன்

அதேபோல, ஹேமந்த் சோரன் அவர்களும் பொறுப்புள்ள பதவியில் இருக்கிறார். அவரையும் சிறை பிடித்துள்ளனர். இது தவறான முன்னுதாரணம் என்று அரசியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். நாடு எங்கேயோ போய் கொண்டிருக்கிறது. வழக்கு செய்த பிறகு அதன் பிறகு கைது செய்ய வேண்டிய துறையினரால் தான் கடந்த காலங்களில் கைது செய்திருக்கிறார்கள். ஆனால், இந்த முறை அமலாக்கதுறையினர் கெஜ்ரிவாலை கைது செய்திருப்பது அதிகாரப் போக்கை வெளிப்படுத்துகிறது. இந்த கைது நடவடிக்கைகளால், இந்தியா கூட்டணிக்கு எந்த பின்னடைவும் ஏற்படாது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இதனால் பின்னடைவு ஏற்படும். டெல்லியில் எல்லா தொகுதிகளும் காங்கிரஸ் - ஆம்ஆத்மி கூட்டணி கைப்பற்றும்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

Read more

ஜார்க்கண்ட்: அமைச்சர் உதவியாளர் வீட்டில் குவியல் குவியலாக பணம் - அமலாக்கத்துறை சோதனையில் ஷாக்

Mon, 06 May 2024

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக ஆலம்கிர் ஆலம் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், ஊரக வளர்ச்சித் துறையின் சில திட்டங்களைச் செயல்படுத்துவதில் முறைகேடுகள் நடந்ததாக பணமோசடி வழக்கு தொடப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆலம்கிர் ஆலமின் செயலாளர் சஞ்சீவ் லாலின் வீடு உள்ளிட்ட பல இடங்களில் இன்று காலைமுதல் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. அதில், 20 -30 கோடி வரை பணம் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

குவியல் குவியலாகப் பணம் கைப்பற்றப்பட்ட வீடியோ சமூக வலைதலங்களில் வேகமாகப் பகிரப்பட்டுவருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் ராஞ்சி, ஜாம்ஷெட்பூர், ஜார்கண்ட், டெல்லி, பீகார் உள்ள பிற இடங்களிலும் சோதனை நடத்தியது. அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு பிப்ரவரி அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாகப் பேசிய ஜார்கண்ட் மாநில பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் பிரதுல் ஷா தியோ,``ஜார்க்கண்ட் அரசின் ஊழலின் முடிவில்லா கதை முடிவுக்கு வருவதற்கான அறிகுறியே இல்லை.

சில நாள்களுக்கு முன்பு காங்கிரஸ் எம்.பி ஒருவரின் வீடு மற்றும் அலுவலகத்திலிருந்து ரூ.300 கோடி ரொக்கம் மீட்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் நெருங்கிய கூட்டாளியான பங்கஜ் மிஸ்ரா, அமைச்சர் ஆலம்கீர் ஆலம் உள்ளிட்டோரின் வீட்டிலிருந்து 25 கோடி ரூபாய்க்கு மேல் மீட்கப்பட்டிருக்கிறது. எனவே, அமைச்சர் ஆலம்கீர் ஆலமை உடனடியாக காவலில் வைத்து, விசாரிக்க வேண்டும்." எனத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

Read more

`மும்பை தாக்குதலில் காவலரை சுட்டது ஆர்.எஸ்.எஸ் ஆதரவு காவலரா?’ - காங்கிரஸ் கருத்தால் சர்ச்சை

Mon, 06 May 2024

2008-ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் வழியாக மும்பைக்கு வந்து மிகப்பெரிய அளவில் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் போலீஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரே உட்பட 160க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் என்பவன் மட்டும் உயிருடன் பிடிபட்டான். விசாரணைக்கு பிறகு அவன் புனே சிறையுல் தூக்கிலிடப்பட்டான். இத்தாக்குதல் சம்பவம் மக்களவைத் தேர்தலில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது. இவ்வழக்கில் அரசு சார்பாக கோர்ட்டில் ஆஜரான உஜ்வல் நிகம் என்ற வழக்கறிஞர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். வட மத்திய மும்பை தொகுதியில் பா.ஜ.க சார்பாக போட்டியிடும் உஜ்வல் நிகம் மும்பை தாக்குதலில் உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப்பை காங்கிரஸ் காப்பாற்ற முயன்றது என்று தெரிவித்து இருந்தார்.

உஜ்வல் நிகம்

இதற்கு பதிலடி கொடுத்த மாநில காங்கிரஸ் எதிர்க்கட்சி விஜய் வட்டேதிவார், மும்பை தாக்குதலின் போது போலீஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரேயை தீவிரவாதி அஜ்மல் கசாப் சுட்டுக்கொலை செய்யவில்லை என்றும், ஆர்.எஸ்.எஸ் ஆதரவு காவலர் ஒருவர்தான் சுட்டுக்கொன்றார். இதை அரசு வழக்கறிஞர் உஜ்வல் நிகம் மறைத்துவிட்டதாக குறிப்பிட்டு இருந்தார். அதோடு சிறையில் தீவிரவாதி அஜ்மல் கசாப்பிற்கு பிரியாணி வாங்கி கொடுத்த விவகாரத்திலும் உஜ்வல் நிகம் பொய் சொன்னதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி இருந்தது.

இதற்கு பதில் கொடுத்துள்ள மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ''எதிர்க்கட்சிகள் அஜ்மல் கசாப் பற்றி கவலைப்படுகின்றன. உஜ்வல் நிகமுக்கு குறி வைத்த தீவிரவதிகளுக்கு ஆதரவு கொடுக்க விரும்புகின்றன. அஜ்மல் கசாப்பை அவமானப்படுத்தி விட்டதாக காங்கிரஸ் தலைவர் விஜய் கூறுகிறார். மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடத்திய தீவிரவாதியை பற்றி காங்கிரஸ் கவலைப்படுகிறது. பா.ஜ.க உஜ்வல் நிகத்திற்கு ஆதரவு கொடுக்கிறது. ஆனால் காங்கிரஸ் கூட்டணி தீவிரவாதி கசாப்பிற்கு ஆதரவு கொடுக்கிறது. இப்போது யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்று முடிவு செய்யுங்கள்'' என்று தெரிவித்தார்.

கசாப்புக்கு சிறையில் பிரியாணி சப்ளை செய்தது குறித்து உஜ்வல் நிகமிடம் கேட்டற்கு, `கசாப் சிறையில் பிரியாணி கேட்கவுமில்லை. வாங்கி கொடுக்கவில்லை. கோர்ட்டில் உணர்ச்சி மிகுதியில் அவ்வாறு கூறிவிட்டதாக’ குறிப்பிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

Read more

``காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்திருப்பது உண்மைதான்; ஆனால்...!” - சொல்கிறார் சிபிஐ முத்தரசன்

Mon, 06 May 2024

``கணிசமான தொகுதிகளில் அ.தி.மு.க-வை விட அதிக வாக்குகளை நாங்கள் பெறுவோம் என ஆணித்தரமாக நம்புகிறார்களே பா.ஜ.க-வினர்!”

``நானும் ரெளடிதான், நானும் ரெளடிதான்’ எனப் பேசி பா.ஜ.க வளர்ந்துவிட்டதாக அண்ணாமலை கருத்துவாக்கம் செய்தாலும் நிதர்சனத்தில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு கூட்டணிகளுக்கு இடையேதான் வெற்றிக்கான போட்டி. தமிழ்நாட்டில் அமைப்பு ரீதியாக தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் மட்டும்தான் பலமாக இருக்கிறது. கோடி கோடியாக பணத்தை கொட்டியதால் பா.ஜ.க கொஞ்சம் வாக்குகள் வாங்கலாம், அவ்வளவுதான்”

எடப்பாடி பழனிசாமி

``ஆனால், தமிழ்நாட்டு அரசியல் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பலமுனை போட்டியாக மாறும் எனச் சொல்கிறாரே சி.பி. எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்...”

``மத்தியில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்கான தேர்தல் இது. நாங்கள் இந்தியா கூட்டணியை ஆதரிக்கிறோம். ஆனால் அ.தி.மு.க-வோ மத்தியில் யார் வந்தாலும் கவலையில்லை என பொறுப்பற்று பேசுகிறார்கள். அ.தி.மு.க-வின் இந்த நிலைப்பாடு பெரும் பின்னடைவை தரும். இதனால் தி.மு.க கூட்டணிக்கு வாக்குகள் அதிகரிக்குமே தவிர, பா.ஜ.க வலுவடையும் என்பதில்லை. அதேசமயம், அ.தி.மு.க-வின் எதிர்காலம் அவர்கள் செயல்பாடுகளை பொறுத்ததே அமையும்”

``தேர்தல் ஆணையத்தை விமர்சித்து, அதன்மூலம் இந்தியா கூட்டணியினர் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளனவே..!”

``தேர்தல் ஆணையத்தை பொத்தாம் பொதுவாக நாங்கள் குற்றம்சாட்டவில்லை. இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையர்கள் தேர்வான முறை, சின்னம் ஒதுக்கீடு செய்ததில் நிகழ்ந்த குளறுபடிகள் என சான்றுகளுடனே விமர்சிக்கிறோம். அண்மையில் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான 4 கோடி ரூபாய் சிக்கியது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை திருப்திகரமாகவுள்ளதா... இதுவே தி.மு.க வேட்பாளர் இப்படி செய்திருந்தால் சலங்கை கட்டி ஆடியிருப்பார்களே”

நரேந்திர மோடி

```கடைசிவரை இந்தியா’ கூட்டணியால் ஒருமித்த தேர்தல் அறிக்கை தரமுடியவில்லை.. அந்த அளவுக்கு கூட்டணிக்குள் கருத்து முரண்பாடுகள் இருக்கிறதே?”

```அப்படியல்ல, `இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் தனித்தனியாக வழங்கிய தேர்தல் அறிக்கைகளில் ஒப்பீட்டளவில் பெரிய முரண்பாடுகள் இல்லை. பொதுவான தேர்தல் அறிக்கை கொடுப்பதும் நல்ல நகர்வுதான். எதிர்காலங்களில் அரசியல் கட்சிகள் அதுகுறித்து சிந்திப்பார்கள்.

ஆனால் எதிரணியான பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க நீட் விலக்கு கேட்கிறது, அண்ணாமலை உயிரே போனாலும் நீட் விலக்கு தரமாட்டோம் என்கிறார். மண்டல் கமிஷன் அறிக்கை நடைமுறைப் படுத்தியதால் வி.பி சிங் ஆட்சியை கலைத்த பா.ஜ.க-வோடு மருத்துவர் ராமதாஸ் கூட்டணி வைத்திருப்பதுதான் வேடிக்கை”

ராமதாஸ், மோடி

``காங்கிரஸ் கூட்டாட்சியை நோக்கி நகர்வதும், குறைந்த இடங்களில் போட்டியிடுவதும் வியூகமல்ல, பலவீனத்தின் வெளிப்பாடு என்கிறார்களே!”

``இந்தியாவில் மாநில கட்சிகள் வலுவடைந்திருப்பதும் காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்திருப்பதும் உண்மைதான். உத்திரபிரதேசம் ஒரு காலத்தில் காங்கிரஸ் கோட்டை, ஆனால் இன்றைய நிலை அதுவல்ல. எனவே பா.ஜ.க-வை தோற்கடிக்க சமாஜ்வாடி கட்சியோடு இணைந்து குறைந்த தொகுதிகளை பெற்றிருக்கிறது காங்கிரஸ்.

ராகுல் காந்தி

இதற்காக காங்கிரஸ் கட்சியின் சரிவடைந்துவிட்டதென கருத வேண்டிய அவசியமில்லை. சூழல் அப்படி அமைந்துவிட்டது. ஒரு கட்சி பலவீனமடைவதும், மீண்டும் பலமடைவதும் தவிர்க்க முடியாதது. தமிழ்நாட்டில் 1991 சட்டமன்ற தேர்தலில் 7 இடங்களில் மட்டுமே வென்ற தி.மு.க கூட்டணிதான் 1996-ல் ஆட்சியமைத்தது.”

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

Read more

Tamil News Live Today: ஓய்ந்தது பிரசாரம்... குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை 3-ம் கட்ட வாக்குப்பதிவு!

Mon, 06 May 2024

வெளியானது +2 தேர்வு முடிவுகள்..!

பயங்கரவாத தாக்குதல்: `பாஜக-வின் தேர்தல் ஸ்டன்ட்’

ஊட்டி, கொடைக்கனல் போறீங்களா?

நாளை 3-ம் கட்ட வாக்குப்பதிவு!

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. முதல் இரண்டு கட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில், நாளை மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. 3ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 93 தொகுதிகளில் நேற்றுடன் பிரசாரம் ஓய்ந்தது. குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா உட்பட 11 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தில் சூரத் தொகுதியில் எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் வாபஸ் பெற்றதால் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். மீதம் உள்ள 25 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

Read more

``வெள்ளை சட்டை மட்டும் அணிவது ஏன்..?" - ராகுல் காந்தி விளக்கம்

Mon, 06 May 2024

கர்நாடக மாநிலத்தின் 28 மக்களவைத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. 14 இடங்களுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 26-ம் தேதி முடிவடைந்த நிலையில், மீதமுள்ள 14 இடங்களுக்கு நாளை (மே 7) வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. தேசியக் கட்சிகள் தொடர்ந்து கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில் நேற்று பிரசாரத்துக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தனர்.

கார்கே, ராகுல் காந்தி

அப்போது, மல்லிகார்ஜுன கார்கே,``எங்கள் பிரசாரத்தில் கெட்டது என எதுவுமில்லை. இந்த உழைப்பு அனைத்தும் நம் நாட்டிற்காகச் செய்கிறோம். நாட்டைக் கெடுப்பவரை, அழிவுக்குக் கொண்டுசெல்பவரைத் தடுக்க வேலை செய்யும் போது நன்றாக உணர்கிறோம். எல்லாவற்றுக்கும் மேலாகக் குறைந்தபட்சம் நாட்டிற்காக ஏதாவது செய்கிறோம் என்ற நிம்மதி இருக்கிறது" எனத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பேசிய சித்தராமையா,``அதிகாரமா சித்தாந்தமா எதைத் தேர்ந்தெடுப்பது எனக் கேட்டால்...

சித்தாந்தம் எப்போதும் முக்கியம். கட்சியின் சித்தாந்தத்தையும் கட்சியின் திட்டங்களையும் மக்கள் முன் வைக்க வேண்டும். நீங்கள் ஆட்சியிலிருந்தால், சித்தாந்தத்தை மக்களுக்குச் சொல்ல வேண்டும். அப்போதுதான் மக்கள் நம் நிலைப்பாட்டைப் பாராட்டுவார்கள், ஆசீர்வதிப்பார்கள். அதிகாரம் வரும் போகும். ஆனால் சித்தாந்தத்திற்கு உண்மையாக இருப்பது பெரிய விஷயம். இதற்காக நமது தலைவர்கள் நிறையத் தியாகங்களைச் செய்திருக்கின்றனர்" எனத் தெரிவித்தார்.

சித்தராமையா

அதைத் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி,``கார்கே ஜி, சித்தராமையா ஜி இருவரின் கருத்துடனும் நான் உடன்படுகிறேன். என் பார்வையில், சித்தாந்தத்தைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் நீங்கள் பெரிய அமைப்பாக உருவாக முடியாது. அதிகாரத்தை நோக்கிச் செல்ல முடியாது. மேலும், ஏழைகள், பெண்கள், பன்மைத்துவம், ஜனநாயகம், அனைவரையும் சமமாக நடத்துதல் போன்ற நமது சித்தாந்தத்தை நாம் மக்களுக்கு விளக்க வேண்டும். தேசியளவில் அரசியல் போராட்டம் எப்போதும் சித்தாந்தத்தைப் பற்றியது.

நான் வெள்ளை நிற சட்டை பயன்படுத்துவதற்கு வெளிப்படைத்தன்மையும், எளிமைதான் காரணம். மேலும் நான் ஆடைகளைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. நான் அதை எளிமையாக்க விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரை, இந்த பிரசாரம் கிட்டத்தட்ட 70 நாட்களாக நடந்து வருகிறது. பாரத் ஜோடோ யாத்ரா ஒரு பிரசாரமல்ல.

ராகுல் காந்தி -

ஆனால், இந்த பிரசாரத்தை விட உழைப்பின் அடிப்படையில் யாத்ரா கடினமாக இருந்தது. இடைவிடாது நீண்ட காலமாக நடந்தது, மக்களின் மனநிலையை அறிந்தது என நீண்ட பயணம் அது. அதன் மூலம் நாட்டிற்கு என்ன தேவை என்பதைப் பற்றிச் சிந்திக்க முடிந்தது" எனத் தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

Read more

4% பணவீக்க இலக்கு... ரிசர்வ் வங்கிக்கு இன்னும் எட்டாத கனியாகவே இருப்பது ஏன்?

Mon, 06 May 2024

இரண்டு வாரங்களுக்குமுன் தமிழ் புத்தாண்டு குரோதி பிறந்தது. ஒவ்வொரு புத்தாண்டும் முற்றிலும் நல்ல ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்பதை நினைவூட்டுவதற்காகவே, கசப்பும் இனிப்பும் கொண்ட வேப்பம்பூ பச்சடி புத்தாண்டு விருந்துடன் பரிமாறப்படுகிறது.

வளர்ச்சிக்கான எதிர்பார்ப்பு அதிகரிப்பு...

பொருளாதாரம் பற்றிய நல்ல செய்திகளைக் கொண்டு இந்தியாவின் புதிய நிதியாண்டும் ஏப்ரல் 1 அன்று தொடங்கியது.  ரிசர்வ் வங்கி ஆளுனர் சக்திகாந்த தாஸ், ஏப்ரல் 3-5 தேதிகளில் நடந்த நாணயக் கொள்கைக் குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் இந்தியா பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது என்று அறிவித்தார்.

ரிசர்வ் வங்கி

கடந்த நிதியாண்டில் (23-24 ) பொருளாதார வளர்ச்சி கணிப்பு 7.5 சதவிகிதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. புதிய நிதியாண்டில் (24-25) பொருளாதார வளர்ச்சிக் கணிப்பு 7.0% ஆகும். வளர்ந்து வரும் உலகளாவிய நிச்சயமற்ற நிலைகள் மற்றும் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலைகள் அதிகரித்துவரும்போது இந்த மதிப்பீடு, பணவீக்க எதிர்பார்ப்புகளை வெற்றிகரமாக நங்கூரமிடுவதில் மத்திய வங்கியின் உறுதியையும் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது.

நமது ரிசர்வ் வங்கியைப் போலவே, ஆசிய வளர்ச்சி வங்கியும் அதன் முந்தைய மதிப்பீட்டின் வளர்ச்சி விகிதத்தை 6.7 சதவிகிதத்திலிருந்து உயர்த்தியுள்ளது. இதன் மூலம் 2024-25-ல் வளர்ச்சி விகிதம் 7% வளர்ச்சியை உறுதி செய்துள்ளது,

பணவீக்கம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 7.8 சதவிகிதமாக உச்சத்தில் இருந்தது, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 5.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

பலமாக இருக்கும் அந்நிய செலாவணிக் கையிருப்பு இந்திய ரூபாய்...

ஏப்ரல் முதல் வாரம் 646 பில்லியன் டாலர் அளவுக்கு அந்நிய செலாவணிக் கையிருப்பு, செப்டம்பர் 2021-ல் முந்தைய சாதனையான 641 பில்லியன் டாலர்களை முறியடித்தது. இதுவே வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து அதிக நிகர மூலதனம் அதிகரித்து, உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இந்தியா பெற்றுள்ளதையே இது காட்டுகிறது.

உலக அளவில் இந்திய ரூபாயானது மிகவும் நிலையான நாணயங்களில் ஒன்றாகும். வளர்ந்துவரும் சந்தை நாடுகள் மற்றும் முன்னேறிய பொருளாதார ஜாம்பவான் நாடுகளுடன் ஒப்பிடும்போது, ரூபாய் பெரும்பாலும் ஒரு வரம்பிற்கு (டாலருக்கு நிகராக 83-84 என்கிற வரம்பில்) உட்பட்டதாகவே உள்ளது.

அந்நியச் செலாவணிக் கையிருப்பு

முந்தைய மூன்று ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2023-24-இல் ரூபாய் மிகக் குறைந்த ஏற்ற இறக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. ரூபாயின் ஒப்பீட்டு ஸ்திரத்தன்மை, இந்தியாவின் சிறந்த பெரிய பொருளாதார அடிப்படைகள், நிதி நிலைத்தன்மை மற்றும் வெளிப்புற நிலையின் மேம்பாடுகளை உறுதிப்படுத்துகிறது.

உலகளாவிய நிச்சயமற்ற நிலைகள் எதிர்கால போக்கைத் தீர்மானிக்கின்றன. அவை, உள்நாட்டு காரணிகளிலிருந்து வேறுபட்டவை. இரண்டுமே இந்தியாவின் பொருளாதார எதிர்காலத்தை உடனடியாகவும், எதிர்காலத்திலும் தீர்மானிக்கின்றன.

ரிசர்வ் வங்கியின் கவலை...

ஆனால், ரிசர்வ் வங்கியானது கொஞ்சம்கூட இறங்காமல் பிடிவாதமாக உச்சத்திலேயே இருக்கும் பணவீக்கத்தைப் பற்றியது. நுகர்வோர் விலை குறியீட்டு அடிப்படையிலான பணவீக்கத்திற்க்கு காரணம், உணவுப் பொருள்களின் விலை உயர்வு மற்றும் எரிபொருள் விலையேற்றமே. உணவு, எரிசக்தி, ஆகிய இரண்டு வகைகளின் விலைவாசி உயர்வுகள், அரசுகள் மற்றும் மத்திய வங்கிகளின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை. உணவு உற்பத்தி வானிலைக்கும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதால், எரிபொருள் போர்கள் உட்பட உலகளாவிய காரணிகளுக்கும் உட்பட்டவை.

ஆர்.பி.ஐ கவர்னர் சக்திகந்த தாஸ்!

பணவீக்கமானது மார்ச் 2022-ல் தொடங்கிய ரஷ்ய-உக்ரைன் மோதலுக்குப் பிறகு தொடங்கி  ரிசர்வ் வங்கியின் 4% இலக்கைவிட அதிகமாக உள்ளது. இந்த மாதம் ஏப்ரல் 12 அன்று வெளியிடப்பட்ட மார்ச் மாதத்திற்கான பணவீக்கம், ஜனவரி மற்றும் பிப்ரவரியில் 5.1 சதவிகிதத்தில் இருந்து 4.8 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குமுன் பணவீக்கம் 7.8 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது!

போர் மேகங்கள் மீண்டும் அடிவானத்தில் திரண்டுள்ளன. இஸ்ரேல்-ஈரான் மோதல் வர்த்தக சீர்குலைவுகளை ஏற்படுத்தும். கப்பல் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பதைத் தவிர, கச்சா எண்ணெய் உற்பத்தி-ஏற்றுமதி நாடுகள் விரைவான பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தயாராக உள்ளன. மேலும், இந்திய விவசாயப் பொருளாதாரம், மழைக் கடவுளின் கருணையில் உள்ள இந்த சூழ்நிலையில், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைத் தளர்த்த அவசரப்படவில்லை. ரிசர்வ் வங்கி புதிய நிதியாண்டில் (24-25) பணவீக்கம் 4.5 சதவிகிதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. ரிசர்வ் வங்கி பணவீக்கம் இலக்கு (4%) இன்னும் எட்டாத கனிதான்.

கடைசி மைல்...

கடைசி மைல் எப்போதும் ஒரு சவால் என்பதை ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெளிவுபடுத்தியுள்ளார். பணவீக்கத்தை எந்த வேகத்தில் குறைப்பது என்பதே இன்றைக்கு எல்லா மத்திய வங்கிகளும் தீவிரமாக யோசித்து வருகின்றன. அந்த வகையில், நம் ரிசர்வ் வங்கியும் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறது. இந்த விஷயத்தில் திடீர் கடின தரையிறக்கத்தைவிட மென்மையான தரையிறக்கம் மிகவும் முக்கியமானது.

உலக வங்கியும் சர்வதேச நிதி மையமும் (IMF) கடந்த ஏப்ரல் 17-19 தேதிகளில் வாஷிங்டனில் உலக நிதி அமைச்சர்கள் மற்றும் ரிசர்வ் வங்கிகளின் ஆளுநர்களுடனும் நடத்திய வருடாந்திரக் கூட்டத்தில் உறுதியானதொரு பரிந்துரையை செய்தது. உறுப்பு நாடுகள் தங்களின் தற்போதைய இறுக்கமான பணவியல் கொள்கையைத் தளர்த்த அவசரப்படக்கூடாது என்பதே அது.  ஈரான்-இஸ்ரேல் மோதல்கள் மற்றும் வர்த்தகத்திற்கான இடையூறுகள் ஆகிய நிச்சயமற்ற நிலைகள் இதற்குக் காரணம்.

சர்வதேச நிதி மையம் (IMF)

மத்திய அரசின் நிதி அமைச்சகத்தில் பணியாற்றுவதற்குமுன், ஆர்.பி.ஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தமிழ்நாட்டிற்குப் பல ஆண்டுகள் சேவை செய்தார். எனவே, அவர் கொன்றை வேந்தனை அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. “பையச் சென்றால் வையம் தாங்கும்” என்பது கொன்றை வேந்தன் 41-வது கருத்து.  இந்த யுக்தி சரியான விளைவுகளை ஏற்படுத்துமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

TK Jayaraman

இந்தக் கட்டுரை ஆசிரியரின் பெயர் முனைவர் டி.கே.ஜயராமன். இவர் குஜராத்தில் இந்திய ஆட்சிமை பணியிலும் (1960-82), பின்னர் ஆசிய வளர்ச்சி வங்கியின் மூத்த பொருளாதார நிபுணர் (1982-97) ஆகவும் பணிபுரிந்து இப்போது பெங்களூரில் உள்ள அமிர்தா ஸ்கூல் ஆஃப் பிசினஸில் கெளரவ வருகைப் பொருளாதாரப் பேராசிரியராக இருக்கிறார்.

Read more

`கமிஷனுக்காக ரூ.55 கோடி நன்கொடை!’ - IT ரெய்டை சந்தித்த கட்சி, மும்பையில் 3 தொகுதியில் போட்டி!

Mon, 06 May 2024

நடைபெறும் மக்கவைத் தேர்தலில் சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளும் கணிசமாக போட்டியின்றனர். மும்பையில் சர்தார் வல்லபாய் பட்டேல் என்ற கட்சியும் போட்டியிடுகிறது. இக்கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சியாகும். இக்கட்சி மக்களவைத் தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இக்கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் யாருக்கும் பெரிய அளவில் சொத்து கிடையாது. மூன்று பேரும் தங்களுக்கு எந்தவித வருமானமும் இல்லை என்று தேர்தல் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளனர். அதோடு அவர்களுக்கு சொந்த வாகனமும் கிடையாது.

இரண்டு பேருக்கு சொந்த வீடே கிடையாது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வருமான வரித்துறை, வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக 200 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது. அதில் சர்தார் வல்லபாய் பட்டேல் கட்சியும் அடங்கும். இக்கட்சி எந்த வித செயல்பாட்டிலும் ஈடுபடாமல் 55 கோடி ரூபாய் அளவுக்கு நன்கொடை பெற்று இருந்தது. இது தொடர்பாக அக்கட்சி தேர்தல் ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்து இருந்தது. ஆனால் அக்கட்சி எந்த வித செயல்பாடுகளிலும் ஈடுபடவில்லை.

அக்கட்சி வங்கிகள் மூலம் நன்கொடை பெற்றுவிட்டு அதில் தங்களது கமிஷனை மட்டும் எடுத்துக்கொண்டு எஞ்சிய பணத்தை நன்கொடை கொடுத்தவர்களிடமே திரும்ப கொடுத்துள்ளனர். இது தொடர்பாக 2022 ம் ஆண்டு வருமான வரித்துறை அக்கட்சி அலுவலகத்தில் ரெய்டு நடத்தியது. இக்கட்சி சார்பாக வடக்கு மும்பை தொகுதியில் போட்டியிடும் கமலேஷிடம் இது குறித்து பேசிய போது, ``எங்களது கட்சிக்கு குஜராத்தில் 4 கவுன்சிலர்கள் இருக்கின்றனர். கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிக்க இத்தேர்தலில் போட்டியிடுகிறோம்” என்றார். கமலேஷ் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவரது மனைவிக்கோ அல்லது அவர் வசிக்கும் கட்டடத்தில் இருக்கும் யாருக்கும் கூட தெரிந்திருக்கவில்லை என்கிறார்கள் அப்பகுதியினர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

Read more

கார்ட்டூன்: எல்லாத்தையும் புடுங்கிருவாங்க..!

Sun, 05 May 2024
கார்ட்டூன்
Read more

பிரிஜ் பூஷன் மகனுக்கு சீட்: ``இன்னும் குற்றம் நிரூபிக்கப்படவில்லையே..!' - நிர்மலா சீதாராமன் விளக்கம்

Sun, 05 May 2024

பாஜக எம்.பி-யும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகட் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் பலர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டது அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. இந்தப் போராட்டத்தில் வீராங்கனைகளுக்கு ஆதரவாக மல்யுத்த வீரர்களும் கலந்துகொண்டனர். நீண்ட போராட்டத்துக்குப் பின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

பிரிஜ் பூஷண் சரண் சிங் - மல்யுத்த வீராங்கனைகள்

வழக்கும் இன்னும் விசாரனையிலேயே இருக்கிறது. இதற்கிடையில், பிரிஜ் பூஷனின் தலைவர் பதவியும் காலாவதியானதையடுத்து அந்தப் பதவிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் அவரின் பல வருட உதவியாளரே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்குப் பல எதிர்ப்புகள் எழவே, இந்திய மல்யுத்த கூட்டமைப்பே தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டது.

இத்தகைய சூழலில், ஆறாவது முறையாக எம்.பி-யாக இருக்கும் பிரிஜ் பூஷனுக்கு சீட் மறுத்திருக்கும் பா.ஜ.க, அவரின் மகன் கரண் பூஷன் சிங்கை கைசர்கஞ்ச் தொகுதியில் வேட்பாளராகக் களமிறக்கியிருக்கிறது. பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் இருப்பதால் சிக்கியிருப்பவரின் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு பா.ஜ.க சீட் கொடுக்கிறது என எதிர்க்கட்சிகள் சாடுகின்றன.

நிர்மலா சீதாராமன்

இந்த நிலையில், புனேவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பிரிஜ் பூஷனின் மகனுக்கு பா.ஜ.க சீட் கொடுத்தது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்திருக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ``எத்தனையோ பேரின் அப்பாக்கள், அம்மாக்கள் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் பிள்ளைகள் தேர்தலில் சீட் பெறவில்லையா... தண்டனை பெற்றவர்களின் பிள்ளைகள் கூட சீட் பெறுகிறார்கள். அனைத்து கட்சிகளும் இதைச் செய்கிறது. மேலும், பிரிஜ் பூஷன் மீதான குற்றச்சாட்டு இன்னும் நிரூபிக்கப்படவில்லை. ஒருவேளை நிரூபிக்கப்பட்டிருந்தால், ஏன் என்று எங்களிடம் கேட்டிருக்கலாம். அப்படியிருக்க, அவரை குற்றவாளி என்று நாமாகவே எப்படி தீர்மானிக்க முடியும்?" என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

Read more

Kangana Ranaut: தேஜஸ்வி யாதவா, தேஜஸ்வி சூர்யாவா... தேர்தல் பேரணியில் கன்ஃபூஸான கங்கனா

Sun, 05 May 2024

பாஜக-வுக்கு எதிராக வட மாநிலங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டுவருபவர் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ். இவர், கடந்த மாதம் தேர்தல் பிரசாரத்துக்குச் செல்லும்போது ஹெலிகாப்டரில் மீன் சாப்பிடும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். நவராத்திரி மாதத்தில் மீன் சாப்பிடுவதை வீடியோவாகப் பதிவிட்டு இந்துக்களின் மனதை தேஜஸ்வி யாதவ் புண்படுத்திவிட்டார் என்று பா.ஜ.க-வினர் பிரசாரம் செய்தனர். இதற்கு முன்பு, ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவுடன் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஆட்டிறைச்சி சமைத்த வீடியோ வெளியான போது கூட, பா.ஜ.க இதே வாதத்தை முன்வைத்தது.

இந்த நிலையில், சமீப காலமாகத் தொடர்ச்சியாக பா.ஜ.க ஆதரவு கருத்துகளைத் தெரிவித்துவந்த பாலிவுட் நடிகையும், பா.ஜ.க வேட்பாளருமான கங்கனா ரணாவத், தேஜஸ்வி யாதவை விமர்சிப்பதாகத் தனது கட்சியின் சக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவை விமர்சித்திருக்கிறார்.

ஹிமாச்சலப் பிரதேசத்தில் தான் போட்டியிடும் தன்னுடைய சொந்த தொகுதி மாண்டியில் நேற்று பிரசாரம் மேற்கொண்ட கங்கனா ரணாவத், ``கெட்டுப்போன இளவரசர்களிடம் கட்சி இருக்கிறது. அது சந்திரனில் உருளைக்கிழங்கு பயிரிட விரும்பும் ராகுல் காந்தியோ, போக்கிரித்தனம் செய்து மீன் சாப்பிடும் தேஜஸ்வி சூர்யாவோ அல்லது வித்தியாசமாகப் பேசும் அகிலேஷ் யாதவோ... இந்த நாட்டின் மொழி மற்றும் கலாசாரம் புரியாதவர்களால் எப்படி இந்த நாட்டை வழிநடத்த முடியும்" என்று பேசினார்.

கங்கனா ரனாவத் (Kangana Ranaut) - தேஜஸ்வி சூர்யா

இதற்கு எதிர்வினையாற்றிய தேஜஸ்வி யாதவ், `யார் இந்தப் பெண்?' என ட்வீட் செய்தார்.

மேலும், கங்கனா ரணாவத் இதே பேரணியில், ``முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு, அவர் காலத்தில் அம்பானியாக இருந்தார். ஆங்கிலேயர்களுடன் அவர் நெருக்கமாக இருந்தார். ஆனால், அவருக்கு அவ்வளவு சொத்து எங்கிருந்து வந்தது என்பது இன்னும் ரகசியமாக இருக்கிறது. சர்தார் வல்லபாய் படேலுக்கு ஆதரவாக வாக்களித்தபோதும் ஜவஹர்லால் நேரு எப்படி பிரதமரானார் என்பது யாருக்கும் தெரியாது. அப்போதிருந்து வாரிசு அரசியல் எனும் கரையான் இந்த நாட்டில் தொற்றிக்கொண்டது" என்று உரையாற்றினார்.

இதனால், மறைந்த முன்னாள் தலைவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகத் தேர்தல் ஆணையத்தில் கங்கனா மீது காங்கிரஸ் புகாரளித்திருக்கிறது. இதே கங்கனா ரனாவத் தான் ஊடக நிகழ்ச்சியொன்றில் இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி என்று கூறி பல விமர்சனத்துக்கு ஆளாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

Read more

`தேர்தலுக்காக இந்து - முஸ்லிம் பிரிவினைவாதத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள்!' - ராஜ்நாத் சிங்

Sun, 05 May 2024

நாடாளுமன்றத் தேர்தல் முதற்கட்ட வாக்குப் பதிவு முடியும் வரை பிரதமர் மோடி உட்பட பா.ஜ.க தலைவர் பலரும், காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் லீக் முத்திரை இருப்பதாக கூறிவந்தனர். முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும், `மக்களின் சொத்துக்களைப் பறித்து ஊடுருவல்காரர்களுக்கு காங்கிரஸ் கொடுக்கப்போகிறது. இதன்மூலம் தாய்மார்களின் மாங்கல்யத்தைப் பறிக்கப்போகிறார்கள்.

மோடி

எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி இட ஒதுக்கீட்டைப் பறித்து இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் கொடுக்கப்போகிறது. காங்கிரஸ் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க நினைக்கிறது' என மதத்தை முன்வைத்து பிரதமர் மோடி பிரசாரம் செய்தார்.

ராகுல் காந்தி - காங்கிரஸ்

பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தவிர, எதிர்க்கட்சிகள் உட்பட பல தரப்பினரும், `பிரதமர் பதவியிலிருந்து கொண்டு அப்பட்டமான மத வெறுப்பு பிரசாரத்தை மோடி செய்கிறார்' எனக் கண்டனத்தோடு விமர்சித்தனர். இந்த நிலையில், தேர்தலுக்காக இந்து-முஸ்லிம் பிரிவினைவாதத்தைக் காங்கிரஸ் உருவாக்க முயற்சிப்பதாக பா.ஜ.க மூத்த தலைவரும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் கூறியிருக்கிறார்.

தனியார் ஊடகத்திடம் பேசுகையில் இதனைத் தெரிவித்த ராஜ்நாத் சிங், ``தேர்தல் ஆதாயங்களுக்காக காங்கிரஸார் இந்து-முஸ்லிம் பிரிவினையை உருவாக்க முயற்சிக்கின்றனர். காங்கிரஸ் மத அடிப்படையில் பதற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறது. அதோடு, சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க விரும்புகிறது. முஸ்லிம்களை அவர்கள் வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கிறார்கள்.

ராஜ்நாத் சிங்

சாதி மற்றும் மதத்தின் பெயரால் சமூகத்தைப் பிரித்து ஆட்சி அமைக்க விரும்புகிறார்கள். அதைத்தான் அவர்கள் எப்போதும் செய்து வருகின்றனர். ஆட்சியமைப்பதற்காக மட்டும் அரசியல் செய்யக்கூடாது. அது தேசத்தைக் கட்டியெழுப்புவதாக இருக்க வேண்டும். மேலும், ராகுல் காந்தி ஒன்றும் நெருப்பு அல்ல. ஆனால், காங்கிரஸ் நெருப்புடன் விளையாடுகிறது" என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

Read more

கனடா: காலிஸ்தான் தீவிரவாதி கொலை வழக்கில் 3 இந்தியர்கள் கைது... ஜெய்சங்கர் கூறுவது என்ன?

Sun, 05 May 2024

இந்திய அரசால் 2020-ல் தீவிரவாதி என அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவில் கொலைசெய்யப்பட்டார். இந்தக் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக தொடக்கம் முதலே கனடா குற்றம்சாட்டிவந்தது. ஆனால், கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா தொடர்ந்து மறுத்துவந்தது.

ஹர்தீப் சிங் நிஜார்

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று ஹர்தீப் சிங் நிஜார் கொலை தொடர்பாக இந்தியர்கள் மூன்று பேரை கனேடிய காவல்துறை கைதுசெய்தது. அதோடு, கரண் ப்ரார் (22), கமல்ப்ரீத் சிங் (22) மற்றும் கரண்ப்ரீத் சிங் (28) ஆகிய அந்த மூன்று பேரின் புகைப்படங்களை வெளியிட்டு, இவர்கள் அமெரிக்க சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருவதாகவும் கனேடிய காவல்துறை கூறியது.

இதுகுறித்து, ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் (RCMP) உதவி ஆணையர் டேவிட் டெபூல் (David Teboul), கைதுசெய்யப்பட்டவர்களுக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதைப் பற்றி விசாரணை நடைபெற்றுவருவதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

அதைத்தொடர்ந்து, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau), ``கனடா வலுவான, சுதந்திரமான நீதி அமைப்பு மற்றும் தன் குடிமக்களைப் பாதுகாப்பதற்கான அடிப்படை அர்ப்பணிப்பு கொண்ட ஒரு சட்டத்தின் ஆட்சி கொண்ட நாடு" என்று நேற்று தெரிவித்தார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

இந்த நிலையில், கனேடிய காவல்துறையின் கைது நடவடிக்கை குறித்து பேசியிருக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ``கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஒருவித கும்பல் பின்னணி கொண்ட இந்தியர்கள் என்று தெரிகிறது. அவர்களைப் பற்றிய தகவல்களை கனேடிய காவல்துறை பகிர்ந்துகொள்ளும் வரை இந்தியா காத்திருக்கும். இருப்பினும், நான் ஏற்கெனவே கூறியதுபோல எங்களுக்கு வருத்தமளிப்பது, இவர்கள் இந்தியாவிலிருந்து குறிப்பாக பஞ்சாப்பிலிருந்து கனடாவில் குற்றங்கள் செய்ய அனுமதிக்கப்பட்டிருப்பதுதான். அது உங்களுக்கே தெரியும்" என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

Read more

Tamil News Live Today: 'கள்ளக்கடல்' எச்சரிகை... திருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு திடீர் தடை!

Sun, 05 May 2024

திருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு திடீர் தடை!

'கள்ளக்கடல்' எச்சரிகையைத் தொடர்ந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் கடல் சீற்றமாக காணப்பட்டதால் பக்தர்கள் குளிக்க திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.எவ்வித அறிகுறிகளும் இல்லாமல் கடல் சீற்றம் அடையும் நிகழ்வை ‘கள்ளக்கடல்’ என்று சொல்லப்படுகிறது. அதாவது "திருடனைப் போல திடீரென்று வரும் கடல்" என்று பொருளாம். இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் வீசும் பலத்த காற்றின் விளைவாக இந்த நிகழ்வு ஏற்படுகிறது என்று INCOIS அமைப்பு தெரிவித்து உள்ளது. இது திடீரென எந்த குறிப்பிட்ட அறிகுறிகளும் எச்சரிக்கையும் இல்லாமல் நிகழ்கிறது. 

அயோத்தியில் தரிசனம் செய்த ஆளுநர் ரவி! 

விமானப்படை வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்... காஷ்மீரில் ஹை அலர்ட்!

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இந்திய பாதுகாப்புப் படையின் இரு வாகனங்கள் மீது தீவிரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் காயமடைந்த இந்திய விமானப்படை வீரர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக இந்திய விமானப்படை, ``சனிக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சண்டையில், விமானப்படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் ஐந்து விமானப்படை வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் உதம்பூர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் விமானப்படை வீரர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Read more