யோகம்

மனிதன் இறை நிலையை அடைவதற்கு யோக மார்க்கமும் மிக  முக்கிய ஒன்றாகும்.யோகிக்கு யோகீச்வரனே குரு என்பார்கள்

எந்த யோகத்தை பழகுவதானாலும் அதை தன்னிச்சையாக பழக கூடாது என்பது விதி.அம்மார்க்கத்தை அறிந்த பெருமக்கள் முன்னிலையில்தான் யோகத்தை பயில வேண்டும்.இல்லையெனில்,தவறான பயிற்சி குறையினால் உடல் நிலை பாதிக்கப்படும்.இது காற்றைப் பிடிக்கும் கணக்கு இக்கனிதம் தப்பினால் சில நேரங்களில் மரணம் கூட சம்பவிக்கலாம்!தசவித நாடிகளில் தசவித வாயுக்களின் ஒன்றான ஜீவன் ஏதேனும் ஒரு நாடிதனில் உயிர் ஒடுங்குதலே சமாதி என்பார்கள்.அந்த சமாதி நிலையை பழகுதலே யோக பயிற்சிகளின் மிக முக்கிய ஒன்றாகும்.
 

சில நேரங்களில் நாடியில் ஒடுங்கிய ஜீவனை இயல்பு நிலைக்கு திரும்ப கொண்டுவர தெரியாமல் ஜீவன் சிக்கிக்கோண்டு விடுபட தடுமாறும் இந்த நேரங்களில் அந்த யோகியை எழுப்ப அல்லது தொட நேர்ந்தாலும் அந்த நாடிதனில் அந்த ஜீவன் ஒடுங்கி விடவும் வாய்ப்பு உண்டு.
இது மற்றவர் பார்வைக்கு மரணம் போல் தோன்றும் ஆனால் அது மரணம் அல்ல சமாதி நிலை.
சமாதி என்றால் என்ன?சம ஆதி திருவள்ளுவர் கூறிய ஆதிக்கு நாம் சமநிலையை அடைவதிலேயே சம ஆதி என்பது மருவி சமாதி என்பார்கள்.இப்படி நாடியில் ஒடுங்கி விட்ட ஜீவனை திரும்பவும் பழைய நிலைமைக்கு கொண்டு வர அம்மார்க்கத்தை அறிந்த பெரியோர்களால் மட்டுமே முடியும்.அதனால்தான் தனிமையில் தான்தோன்றித்தனமாக யோகத்தை பயி்லக்கூடாது என்பார்கள் பெரியவர்கள்.சமாதிக்கே இந்த பாடு என்றால் மோட்ச சாதனத்தை பற்றி யோசித்துப்பாருங்கள் யோக மார்க்கத்தில் மோட்சத்தை அடைய இரண்டு வழிகள் உண்டு.அவை 1.சாங்கியம் 2.யோக மார்க்கம் என்பன.சாங்கியம் என்பது பூர்வ அப்பியாச தன்மை உடையவர்கள்.யோகம் என்பது மற்றவர்களுக்கும் உபயோகப்படும்.சிலருக்கு சாங்கியம் பிடிக்கும்,சிலருக்கு யோகம் பிடிக்கும்.பூர்வ அப்பியாசிகள் முறைப்படி குருகுல வாசிகள் ஆகையால் அவர்களை பார்ப்பதை விட யாவருக்கும் பயன்படும் யோகத்தை பற்றி பார்ப்போம்.

யோகம் என்பது பிரமாணம் (ரூல்ஸ்)
விபரீதம் (முறை தவறுபவர்கள்)
விகர்ப்பம் (கர்ப்ப மற்றது)
நித்திரை (தூக்கம்)
ஸ்ருதி(சோம்பேறித்தனம்) இவ்வைந்து பாகங்களும் சித்த நிர்விஷயத்தில் நிலைப்பெற்று இருக்கும் இந்த யோகத்தில் உத்தமம் மத்திமம் அதமம் (மற்றஅதிகாரம்)இதற்கு அப்பியாச வைராக்கியமும் தவசும் சுவாத்யாயம் ஈச்வர பிரவிதானமும் வேண்டும் என்று கிரியா யோக இயமாதி அச்டங்களும் சாதனமாக  யோக சூத்திரங்களாக கூறப்படுகின்றன.அந்த சாதன யோகமும் விய வகாரத்தினால் மந்திர யோகம், ஹட யோகம், லய யோகம், ராஜ யோகம் என்று நான்கு வகையாக்ப் பிரிக்கப்படுகின்றது.
இப்பயிற்சி செய்பவன் அஷ்டமாசித்தி விதி பூர்வமாக மந்திரத்தை பன்னிரண்டு வருடங்கள் வரையில் பிரயோகித்தால் அதுவே மந்திர யோகமாகும்.இப்படி அப்பியாசித்தும் அனிமாசித்திகளை அடையலாம்.
இவை மும்மூர்த்திகளாகும் நாரதர் சுகர் வியஞ்ய வல்கியர் வசிஷ்டர் முதலிய ஞான ச்ரேஷ்டர்களாலும் மச்சேந்திரர் முத்லிய  சித்தர்களாலும் அப்பியாசிக்கப்பட்டதாகும். இதை ஆதி நாதராகிய பரமேஷ்வரன் மச்சேந்திர நாதருக்கு உபதேசித்தார்.மச்சேந்திரர் கோரக்கருக்கு உபதேசித்தார்.அந்த கோரக்கனாதருடைய கிருபையால் ஹட யோக வித்தையை பெற்ற யோகிந்தரர் இக்காலத்துக்கு தகுந்த படி எளிதில் உணரும் படி ஹட யொகத்தை கொடுத்தார் இவை எல்லாம் தக்ககுருமார்களை கொண்டே படிக்கவேண்டும் மேலும் யோகத்தை பற்றிய அறிவை வளர்த்து கொள்ளவேண்டுமென்றால் ஹட யோக தீபிகை என்னும் நூலினை படிக்கலாம்.அந்நுலில் நான்கு உபதேசங்கள் உள்ளன்.
1.தேகம்,மனம்,ரஜோ தன்மையையும் சஞ்சல தன்மையையும் உள்ளதை மாற்றி  ஸ்திர தன்மையாயும் ஆசனங்களையும், அதை பற்றிய விளக்கங்களையும் போடப்பட்டுள்ளன
2.மல சுத்தியில் வாயுவின் ஸ்திர தன்மையும் வாயுவின் ஸ்திர தன்மையால் சித்தத்தின் தன்மையும் வாயு ஸ்திர தன்மை இவைகளின் தன்மையால் தீர்காயுளும் அனிமாதிகளும் ஐச்வர்யங்களும் சித்திகளும் தருவதற்க்கு தகுந்த பிராணாயாமமும் சொல்லப்படுகின்றன.


தொடரும்...

இனிய பக்தி பாடல்கள்,
பக்தி சொற் பொழிவுகள்,
பக்தி திரைப்படங்கள்,
கர்நாடக இசை
போன்றவைகளை
காணொளியில்
கண்டு கேட்டு மகிழுங்கள்

சித்தர் பாடல்கள்

பக்தி பாடல்கள்

ஆன்மீக சொற்பொழிவுகள்

பக்தி திரைப்படங்கள்

கர்நாடக இசை

இணைய வானொலி


 June 23rd, 2011 அன்று புதிய பதிவுடன்
©-2018 - தெய்வீக சித்தமார்க்கம்