இரசவாதம்

 

இரசவாதம் என்பது இந்தியர்களுக்கு ஒன்றும் புதிதல்ல...அது பழக்கமான ஒன்றுதான்.ஒரு நாட்டின் கருவூலத்திற்க்குத் தேவையான பொன்னை தயாரிக்கும் பணியை நாட்டின் இராசகுருவே பூர்த்தி செய்து கொண்டிருந்தார், இன்றும் நமது சாதுக்கள் மத்தியில் இரசவாதம் இரசவாதப்பொன் இரசவாத வெள்ளி இரசவாத தாமிரம் இரசவாத நாகம் சோற்றுப்பிலிருந்துபாதரசம் பிரித்தெடுப்பது மூலிகையிலிருந்து பாதரசம் பிரித்தெடுப்பது போன்றவற்றை இன்றும் செய்து கொண்டுத்தானிருக்கிறார்கள் அதே சமயம் தங்கத்தைமண்ணிலிருந்து பிரித்தெடுத்ததாகத்தெரியவில்லை,பொன்னெல்லாம் இரசவாதபொன்னாகத்தான் தயாரித்தார்கள் என்பது அடியேனின் கணிப்பு,மக்கள் மத்தியில்தங்கமே நாணயமாக புழக்கத்தில் இருந்த நாட்டில் தங்கச்சுரங்கம் மட்டும்இல்லை...இது எப்படி சாத்தியம் அவ்வளவு தங்கம் எங்கிருந்து வந்தது...?யார்கொடுத்தது..?தங்கத்தை நாணயமாக புழக்கத்தில் விட்டதற்கும் சில காரணங்கள்இருக்கலாம்,உப்பு நீரிலும் அரிமானம் ஏற்ப்படாத உலோகம் ஒன்று வேண்டும்என்றஅடிப்படையிலும்,அணிகலன்கள் தேவைப்படும் காரணத்தாலும் தங்கத்தைபோன்ற அல்லது தஙத்தை விட உயர்ந்த உலோகத்தை தயரித்தார்கள் அதை எப்படித்தயாரித்தார்கள் எதனால் தயாரித்தார்கள்? இரசத்தை தங்கமாக மாற்றுவது தங்கத்தையேமாற்று உயர்ந்ததாக மாற்றுவது செம்பை தங்கமாக மாற்றுவது வெள்ளியை தங்கமாக மாற்றுவது காரீயத்தை தங்கமாக மாற்றுவது வெள்ளீயத்தை தங்கமாக மாற்றுவது அயச்செம்பை வெள்ளியால் கொடுத்து தங்கமாக மாற்றுவது நாகத்தை செம்பாக மாற்றுவது பூநாகத்தை செம்பாக மாற்றுவது பூ நாகத்தை செம்பை தங்கமாக மாற்றுவது போன்றசெய்முறைகள் இன்றும் நம் நாட்டில் புழக்கத்தில்தான் இருக்கிறது. சித்தர்களும் தமதுநூல்களில் இக்கலையை பற்றி பேசியுள்ளனர். மாற்ற உலோகத்தையோ அல்லதுதங்கத்தையோ அல்லது இரசத்தையோ ஏன் மற்று உயர்ந்த உலோகமாக மாற்றினார்? அணுமாற்றத்தை நிகழ்த்தும் மருந்தே தன் உடலில் அணுமற்றத்தை நிகழ்த்தும் மெய்ஞானப்பூர்வமாக உணர்ந்தார்கள்அந்த உணர்வுகளே அவர்களை இந்த மெய்ஞான பாதையில் கொண்டு சென்றன.இன்று இரசவாதம் சாத்தியமா...அல்லது அரசங்கம்தான் அதற்கு ஒத்துழைக்குமா என்ற  கேள்வி எழும் இரசவாத தங்கம் ஒரு நாட்டின் பொருளாதாரத்தையையே நிர்ணியிக்க வல்லது என்பது மேலானவர்களுக்கு தெரியாதா என்ன? இக்காரியத்தை இன்றய சாதுக்கள் தமது ஜீவனத்துக்கு கூட இதை செய்வதில்லை,சோத்துக்கு செய்வானேன்,உயிருக்கு ஒளிவானேன்,தூக்கியதை எறிவானேன்...அப்படியே செய்தாலும் தம் ஜீவனத்திற்கு தேவையானதை பூர்த்தி செய்து கொண்டு  விலகி விடுவார்கள் மேலும் அதை எப்பொழுதும் தொழிலாகச்செய்வதில்லை.அப்படி முயற்சிப்பவர்கள்தான் வில்லாலியின் கண் பட்டு அவன் அம்புக்கு பலியாகும் மான் போலே இடையிலே துர்மரணத்தை அடைகிறார்கள் எத்தனையோ பேர் தனக்கு இந்த இரசவாதக்கலை தெரியும் என்று மார் தட்டியவர்கள் அவர்கள் தம் இலக்கை அடையாமல் கொல்லப்பட்டோ துர் மரணம் அடைவதையோ கேள்வி பட்டிருக்கலாம்.மாறாக இந்த வித்தைக்கு உயிர்க்கொல்லி வித்தை என்றொருப்பெயரும் உண்டு என்பதை மறந்து விடாதீர்கள்.காயத்தை பக்குவப்படுத்தி இறை நிலையை அடைய இந்த உடலை எப்படி பக்குவப்படுத்துவது என சிந்தித்தலே சித்த புருஷர்கள் மகான்கள்,சாதுக்களின் நோக்கமாகும்.
 

இனிய பக்தி பாடல்கள்,
பக்தி சொற் பொழிவுகள்,
பக்தி திரைப்படங்கள்,
கர்நாடக இசை
போன்றவைகளை
காணொளியில்
கண்டு கேட்டு மகிழுங்கள்

சித்தர் பாடல்கள்

பக்தி பாடல்கள்

ஆன்மீக சொற்பொழிவுகள்

பக்தி திரைப்படங்கள்

கர்நாடக இசை

இணைய வானொலி


 May 1st, 2011 அன்று புதிய பதிவுடன்
©-2018 - தெய்வீக சித்தமார்க்கம்