முப்பூ-குரு


சித்தர்களில் முப்பூவை பற்றி பேசாத சித்தர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு முப்பூவைப் பற்றி பேசி இருக்கிறார்கள். எண்ணிறைந்த சித்தர்கள் எண்ணிறைந்த பொருட்கள் எண்ணிறைந்த செய்முறைகள்,என்பதே சரி என்று தோன்றுகிறது.ஒரு சித்தரின் குரு பாரம்பரியம் கையாண்ட பொருளை இன்னொரு குரு பாரம்பரியம் கையாண்டதா...?என்பது சந்தேகமே... ஒவ்வொரு பாரம்பரியத்தின் பொருள் வேறு செய்முறை வேறு...என்றே தோன்றுகிறது. அனுபவத்தில் பார்க்கும் போது யோகியரும் சித்த மரபினரும் சித்த வைத்தியர்களும்  பெரும்பாலும் தான் கையாளும் பொருளே அதாவது பிரணவப்பொருளே சரியானது என்று வாதாடியவர்கள்தான் அதிகம். அனுபூதிகள் வாய் திறப்பதில்லை தீக்ஷ்ன்யமான பார்வையும் மவுனமும் ஒரு இளஞ்சிரிப்பையும் தான் காணமுடியும்.எப்பொருள் ஆகட்டும் அப்பொருள் நாதம் விந்து பரையின் கலப்பு இல்லாமல் உலகில் எந்த பொருளும் இல்லை என்பதுதான் மாபெரும் உண்மை.ஒரு கைப்பிடி மண் இருந்தால் கூட போதும் முப்பூவை முடிக்கலாம் என்பதை உணரும் வரை முப்பூவுக்குண்டான பொருளைத் தேடித்தான் போயாக வேண்டும். முப்பூவுக்குண்டான் அகர உகர பொருள்... சில பொருட்களில் மட்டுமில்லை அது இறைவனைப்போல் அங்கிங்கெனாதபடி உலகமெங்கும் நீக்கமற நிறைந்த்திருக்கிறது. எந்தப்பொருளானாலும் அந்தப் பொருளில் நாத விந்துபொருட்களை பிரித்து கூட்டும் நுட்பம் அறிந்தவன் அதை முப்பூவாக முடிக்கும் திறன் படைத்தவன் அகும். அப்படிப்பட்டவர்கள் இன்னமும் நம்மோடு வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். அவர்கள் வாய் திறவா மவுனியாய் வாழ்ந்து பின் இறை நிலையை அடைகிறார்கள். அண்டங்கள் மொத்தம் ஆயிரத்தெட்டு அண்டமென்பார்.அதனிலும் உயர்ந்தது நூற்றி எட்டென்பர் அதனிலும் உயர்ந்தது அறுபத்தினான்கென்பர் அதனிலும் உயர்ந்தது முப்பத்திரண்டென்பர் அதனிலும் உயர்ந்தது பதினாறு என்பர் அதனிலும் உயர்ந்தது எட்டு என்பர் அதனிலும் உயர்ந்தது நான்கு என்பர் அதனிலும் உயர்ந்தது இரண்டு என்பர் அதனிலும் உயர்ந்தது ஒன்று என்பர்...அதுதான் பிரணவப்பொருள் அந்த ஒன்றே நிஜம்,அந்த ஒன்றே தீர்க்கம்,அந்த ஒன்றே மார்க்கம் அந்த ஒன்றை யார் மூலம் அறிவது? எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும் என்பர்.எண்ணும் எழுத்தும் கண்ணெந்த்தகும் என்பர் எந்த எண்ணை கண்ணெனக்கொள்வது... பிரணவத்தையும் காட்டி கோச பீசங்களையும் காட்டி உபதேசித்து உயிர்ப்பித்து இறவா நிலையை அறிவித்து ஒரு குழந்தையின் கைகளுக்கு தன் சுட்டு விரலை நீட்டி அழைத்த்ச் செல்வது போல் அழைத்துச் செல்லும் குருவே பகவான். அவன் திருப்பாதங்களைப்பணிந்து வழிக்கேள்...அவனே உனக்கு வழிக்காட்டி...மூப்படையும் முன் முப்பை அடைந்து விடு.

இனிய பக்தி பாடல்கள்,
பக்தி சொற் பொழிவுகள்,
பக்தி திரைப்படங்கள்,
கர்நாடக இசை
போன்றவைகளை
காணொளியில்
கண்டு கேட்டு மகிழுங்கள்

சித்தர் பாடல்கள்

பக்தி பாடல்கள்

ஆன்மீக சொற்பொழிவுகள்

பக்தி திரைப்படங்கள்

கர்நாடக இசை

இணைய வானொலி


 May 1st, 2011 அன்று புதிய பதிவுடன்
©-2019 - தெய்வீக சித்தமார்க்கம்