ஹேவிளம்பி வருஷத்திய வெண்பா

 

ஏவிளம்பிமாரியற்ப மெங்கும் விலை குறைவாம்
பூவில்விளைவரிதாம் போர்மிகுதி-சாவதிகம்
ஆகுமே வேந்த ரனியாயமே புரிவார்
வேகுமேமேதினிதீ மேல்.

 

பொருள்: இவ்வாண்டில் மழை குறையும் பொருட்களின் விலை வீழ்ச்சி அடையும் மலர்களின் உற்பத்தி அறவே இருக்காது மன்னர்களுக்கு இடையே கடுமை மிக்க போர்கள் நடக்கும்.எண்ணிக்கையில் அடங்காத அளவு மக்கள் மடிந்து போவர்,வேந்தர்கள் நியாயத்தையும் தர்மத்தையும் மறந்து அதர்மம் அநியாயம் வழிச்சென்று போர் பல நடத்தி மடிவர்.இவ்வுலகம் முழுவதும் தீயினால் சேதம் ஏற்படும்.

 


இது காலக் கணக்கீட்டின் முறை

 

இது காலக் கணக்கீட்டின் முறை
உதயத்தையும்
அஸ்தமனத்தையும்
அடிப்படையாக கொண்டது நமது
காலக்கணக்கீட்டு முறை
நமது சுவாசத்துக்கும்
இக்காலக்கணக்கீட்டு முறைக்கும்
நிறைய ஒற்றுமையுண்டு
முப்பது பாகை கொண்டது
ஒரு வானமண்டலம் அதில்
இரண்டேகால் நட்சத்திரங்கள் நிற்கும்
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் நான்கு பாதங்கள்
முப்பது பாகை கொண்ட ஒரு ராசி மண்டலத்திற்கு
ஒன்பது நட்சத்திர பாதங்கள்
27 நட்சத்திரத்திற்கும் 108 பாதங்கள் இவை
முப்பது பாகை கொண்ட ஒரு வான மண்டலத்திற்கும்
தனது கதிர்களை வீசுகின்றன
இந்த கணிதம் எப்படி பிறந்தது?
மனிதனின் சுவாசத்தின் அடிப்படையில் பிறந்தது
ஒரு மனிதனின் ஒருநாள் சுவாசத்தின்
எண்ணிக்கை 21,600 ஆகும்
ஒரு நாளைக்கு 60 நாழிகை ஆகும்
அப்படியே இதை வகுத்து பாருங்கள்?
21600 / 60 = 360
360 என்பது வான மண்டலத்தில்
12 ராசிகளின் மொத்த பாகை ஆகும்
12*30=360 ஆகும் இதுதான் நமது
முன்னோர்களின் கணக்கீட்டு முறைகளாகும்.

                   இப்படிக்கு                   

  அன்பன்

அ இராகவன்.

அணுவும் சித்தமும்

ஜல்லிகட்டுக்கு அவசர சட்டம்
மகிழ்ச்சி
சித்தமார்க்கத்துக்கும் ஓர் அவசர
சட்டம் வேண்டும் என்பது தவறா?


பனியில் நனைந்த மலர்களுக்கு
சூரிய கதிர்களின் தழுவுதல்
இதமானது இந்த இதம்
சித்தமார்க்கத்துக்கும் வேண்டும்


தடை செய்ய வேண்டியதை
தடை செய்யுங்கள் அது
தீவிரவாதிகளுக்கு எதிராக
சமூகவிரோதிகளுக்கு எதிராக
நாங்கள் என்ன சமூகவிரோதிகளா?


இது தேவரகசிய வித்தை
எங்களுக்கு பரம்பரியத்தை காக்க
வேண்டும்.
இது மாற்று மருத்துவம் அல்ல
இதுதான் நம் பரம்பரிய மருத்துவம்
சித்த இரசாயன சாஸ்திரம் அதில்
புதையுண்ட ரகசியத்தை தோண்டினால்
பத்ம நாப புர கோயில் புதையல்
சித்த இரசாயனத்தின் விதை என்பது
புரியும்.


எந்த பூமியில்
எழுபத்தி இரண்டு கேரட்டில் தங்கம்
விளைந்தது?
இது அத்தனையும் சித்த இரசாயனத்தின்
பதிவுகள் ஆகும்.
நவீன இரசாயன சாஸ்திரம் நூற்றி எட்டு
எலமெண்ட்ஸ் தான் கண்டுபிடித்துள்ளன
நம்
சித்த இரசாயன சாஸ்திரத்திலோ
முன்னூற்றி ஐம்பதிற்கும் மேல்
எலமெண்டை கண்டுபிடித்து
வைத்துள்ளன.


அப்படி ஆய்வு செய்யும் பரம்பரியத்தை
ஊக்குவிக்கவில்லை என்றாலும்
சட்டத்தால் தடுக்காதீர்கள்
இது விஞ்ஞானம் அல்ல
மெய்ஞ்ஞானம்


அணுவிண் இயக்கமே
சித்த வியூகம்
ஆக்க வல்லானும் அவன்தான்
அழிக்க வல்லானும் அவன்தான்
காக்க வல்லானும் அவன்தான்
நமக்கு மெய்ஞ்ஞானமே ஆனிவேர் இது கூட
நம்
பரம்பரியத்தை மீட்டெடுக்கவே
இந்த பரிவாரம்
இந்த ஆரவாரம் அவசர பட்டதல்ல
ஆழ்ந்து சிந்தித்தது
இதன் விதை ஒவ்ஒரு மனிதனின்
சித்தத்திலும் வேர் ஊன்றி உள்ளது
ஆனல் அதற்கு
இயற்கை உரம்
நம்
சித்த நூல்கள்
என்ன செய்வது
தோலை தட்டிகொடுக்க கூட
ஆறுதலான கைகள் இல்லை
ஜல்லிகட்டுக்கு எழுந்த வீரம்
சித்தமார்க்கத்துக்கும் திரண்டெழ
வேண்டும்
எங்கள் முப்பாட்டனும்
உங்கள் முப்பாட்டனும்
தவமிருந்து பெற்ற வரம் இது
சித்தமார்க்கம் இது
ஆக்கபூர்வமான மார்க்கம்
இந்த பாரம்பரியம் போலியல்ல
இது
உனக்கும் தெரியும்
எனக்கும் தெரியும்
சரித்திர சான்றுள்ள பொக்கிஷம் இது


வீரம் விளைந்த நம் மண்ணில்-புது
வியூகத்தை தீரத்தை கண்டதுமுண்டோ
மார்தட்டி எழுந்திரு தோழா- நம்
மண்ணின் மகத்துவம் இதுவென்று காட்டு


சாதி மதம் இனம் மொழி
இவை அனைத்தும்
கடந்து போரடும்
சகோதர சகோதரிகளுக்கு
நன்றி!


அன்பன்
அ ராகவன்

நேற்று சித்தமருத்துவம் இன்று ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு ஆண்டவனின் வாகனமே நந்தி
அதற்குமா வந்தது அந்தி?
ஆதியில் ஜனக மகாராஜா
பொன்னேரு பூட்டி உழும் பொழுது
ஏர்காலில் பட்டதோர் பழுது
என்னவென்று பார்க்க
பெட்டியிலோர் குழந்தை-அன்பை
கொட்டி அணைத்தார் அவள் சீதை
இது ராமாயணம்
மனு நீதி சோழன்
ஏர் கால் ஓடும் எருதினைபூட்டி
நீதியை காக்க ஒர் காலும் தவறேன் என்று
தன் மகனையே இழந்தான்
அதே மரபில் உதித்து ஏரெழபது
என்றுதித்தது கம்பனின்
ஏர்கால் காவியம்
இந்த நூல் சிறியது அதன் கீர்த்தி
பெரியது ஆதி முதல் இன்று வரை
சில உதாரணங்கள் இவை
ஏர்காலின் பெருமைக்கு ஒர்காலே
ஆதாரம் அது தமிழகத்தின் காளைகள்,பசுக்கள்
எந்த நாட்டிலாவது
விடையேறி தூவென்மதி சூடி
ஆடலுடன் வந்தானா ஆண்டவன்?
ஆனால் இங்கு வந்தான் பிட்டுக்கு
மண் சுமந்தான் நாயன்மார்களுக்கு
நாயகனானான்
இது
தெய்வீக நாடு
நம் மொழி தோன்ற கடவுளே காரணம்
அந்த கடவுளின் முதற் சீடனும்
ஒரு காளையே!
மாட்டுக்கு பொங்கல் வைத்து
ஒரு நாடே கொண்டாடும் பண்டிகை
உலகத்தில் வேறெங்கேனும் உண்டா?
சொல்
இது
எங்கள் கலாச்சாரத்தை
மீட்டெடுக்கும் யுத்தம்
இது
போராட்டமல்ல நம் பாரம்பரியத்தை
மீட்டெடுக்கும் யுக்தி
இழந்த பாரம்பரியத்துக்கோர்
உதாரணம் சித்தமருத்துவம் அன்று
சித்தமருத்துவம் இன்று
ஜல்லிக்கட்டு
ஆயுள் வேதத்தை
ஆயுர் வேதமாக மாற்றியமைக்கப்பட்டது
சித்த்மருத்துவத்தின் மூலப்பொருட்கள் கிடைக்கின்றதா?
இல்லை;
உதாரணம்?
உப்புக்கள் 27 ல் சில
பாசாணங்களில் சில
வெள்ளை பாசாணம்
கார்முகில் பாசாணம்
கிளி மூக்கு பாசாணம்
குதிரை பல் பாசாணம்
சிகப்பு பாசாணம்
பொன் நிமிலை
கம்பி நவாசாரம்
கம்பியுப்பு
இப்படி எத்தனையோ உண்டு
இவை எல்லாம் சித்த மருத்துவருக்கு
கிடைகின்றதா?இல்லை.
ஆனால் இவைகள் கெமிக்கல்
கம்பெனிகளுக்கு கிடைக்கிறது
உதாரணதிற்கு ஆர்சனிக் போன்றவை
இது சித்தமருத்துவனுக்கு தடை விதித்த
பொருள்.
இப்படி பொருட்களை பாரம்பரியத்தை
கையை கட்டி வாயை பொத்தி
புத்தக பொதி சுமக்கும் மூளை சோதிக்க
சத்தான பொருள் இல்லையே
நேற்று சித்தமருத்துவம்,
இன்று ஜல்லிக்கட்டு
நாளை............?
ஈர மண்ணில் விழுந்த விதை பூமியை
பிளந்து முட்டிமோதி வெளியே வந்து
வழி காட்டும்.
இந்த கலாசாரமண்ணில் நான்
விதையாய் விழுந்து ஜனிப்பேன்
உன் பாரம்பரியத்தில் கூட
கை வைத்துவிட்டார்கள் அடுத்து வளமான
மண் இப்படியே போனால் என்னவாகும்?
அடிமையின் வாழ்வுதான் திண்ணமாகும்
இந்த வேரை யாரும் அறுக்க முடியாது
ஆம். இது குமரி கண்டத்து வேர்
ஆதி தமிழனின் பாரம்பரியம்
விட்டுகொடுக்கமாட்டோம்
உரிமைக்காக கட்டுக்களையாமல்
இக்களத்தில் போராடுவோம்.

அன்பேசிவம்.

யார் இந்த பீட்டா அமைப்பு ?

PETA- People for the ethical treatment of animals என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்த அமைப்பானது 1980 ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இயங்கி வருகிறது. அமெரிக்காவில் ஆதரவற்ற விலங்குகளைப் பாதுகாக்கும் ஒரு காப்பகம் என தன்னைப் பதிவு செய்து கொண்டது. (எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் நம்மூரில் முதியோர் காப்பகங்கள் இயங்கி வருவதைப் போல) சரி... அதன் பின்னர் நடந்தது என்ன? வீதியில் ஆதரவின்றி அலையும் நாய்கள் மற்றும் பூனைகளைக் காப்பாற்ற களத்தில் குதிக்கப் போவதாக அறிவித்தது பீட்டா. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான போன்கால்கள் பீட்டாவிற்கு தெருநாய்களைப்பற்றி வரத் துவங்கின. இலட்சக்கணக்கான விலங்குகள் காப்பகத்தில் குவிந்துவிடவே அமெரிக்க அரசை நிர்பந்தப்படுத்தி ஒரு சட்டம் இயற்ற வைத்தது பீட்டா. அந்தச் சட்டத்தின் படி பதினைந்து நாட்கள் பீட்டா ஒரு ஆதரவற்ற நாயைப் பராமரிக்கும். அந்தப் பதினைந்து நாட்களுக்குள் யாரும் அந்த நாயைத் தத்தெடுக்க முன்வராவிட்டால் பீட்டா அந்த நாயைக் கருணைக் கொலை செய்து கொள்ளலாம். இவ்வாறு 2015 ம் ஆண்டு மட்டும் பீட்டா கொலை செய்த நாய்கள், பூனைகள், முயல்கள் மற்றும் இன்னபிற விலங்குகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சி அடைய வேண்டாம்... 35000. ஆமாம் நண்பர்களே... முப்பத்தி ஐந்து ஆயிரம் !!! இந்தக் கருணை நிறைந்த மகா கொலைகாரர்கள் நம்மிடம் வந்து சொல்கிறார்கள்... நீ மாட்டு வாலைத் திருகுகிறாய்! கொம்பைப் பிடிக்கிறாய்! கழுத்தைக் கட்டிக் கொண்டு அதைத் துன்புறுத்துகிறாய்! அதனால் நீ மாட்டை மிருகவதை செய்கிறாய்... எனவே ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்ய வேண்டும்! 'சாத்தான் வேதம் ஓதுகிறது' என்பார்களே நம்மூரில்... பீட்டா செய்வது அதுவே தான்!! பீட்டா - மிருகவதை வியாபாரம் ------------------------------------ அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் பீட்டா கருணைக் கொலை என்ற பெயரில் ஏன் இத்தனை இலட்சம் நாய்களையும், பூனைகளையும்,முயல்களையும் கொல்ல வேண்டும்? அதற்கு உணவு அளித்துப் பராமரிக்கப் பணமும், இடமும் இல்லை என்பது மட்டும் தான் உண்மையான காரணமா? இதற்கான பதிலில் தான் இருக்கிறது சூட்சுமம்! அமெரிக்காவில் வளர்ப்புப் பிராணிகள் விற்பனை என்பது பல்லாயிரக்கணக்கான கோடிகள் புரளும் மிகப் பெரிய மார்க்கெட். எனவே வளர்ப்புப் பிராணிகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் பீட்டாவிற்கு மிகப் பெரும் பணத்தை நிதியுதவி என்ற பெயரில் தொடர்ந்து வழங்கி வருகின்றன. பீட்டாவின் இந்த கருணைக் கொலைகள் அவர்கள் வியாபாரம் சரிந்து விடாமல் உயர்ந்து கொண்டேயிருக்க உதவுகிறது என்பது தான் உண்மை. சரி. அப்படியானால் அமெரிக்காவில் பீட்டாவைத் தவிர வேறு ஆதரவற்ற விலங்குகளைக் காப்பாற்றும் அமைப்புகள் இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம். நிறைய இருக்கின்றன.ஆனால் பீட்டா அந்த நிறுவனங்கள் மீது தனது உளவாளிகளை ஏவி அவர்கள் அந்த விலங்குகளைப் பராமரிக்கும் விதத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கிறது. ( நம்மூர் ஜல்லிக்கட்டில் நடந்ததும் இதேதான்) அந்த ஆதாரங்களைக் கொண்டு நீதிமன்றத்தை அணுகி அவர்களை முடக்குகிறது. போட்டியே இல்லாமல் நடக்கும் இந்த மிருகவதை வியாபாரம் பீட்டாவின் செல்வச் செழிப்பையும், செல்வாக்கையும் நாள்தோறும் அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறது என்பதே இன்றைய நிலை! சரி... நம்மூர் ஜல்லிக்கட்டை நிறுத்துவதில் பீட்டாவிற்கு ஏன் இத்தனை அக்கறை? நம்ம தெருவில் சாதாரணமாக காணும் காட்சிதான் இது. இரண்டு அல்லது மூன்று மாடுகளை பக்கத்து வீட்டுக்காரர் சொந்தமாக வைத்திருப்பார். பகலில் அந்த மாடு சர்வசாதாரணமாக வீதிகளில் அலைந்து கொண்டிருக்கும். கிராமங்களில் வயல்வரப்பின் ஓரமாக மேய்ந்து கொண்டிருக்கும். நம் வீட்டுப் பெண்கள் அதற்கு வீட்டில் மீதமாகிப் போன கஞ்சியை பாத்திரத்தில் வைப்பார்கள். அதுபாட்டுக்கு குடித்துவிட்டு போய்க் கொண்டே இருக்கும். காலையிலும், மாலையிலும் அந்த மாட்டின் சொந்தக்காரர் பத்து வீடுகளுக்கு பால் ஊற்றிவிட்டுப் போவார். அவருக்கான வருமானம் அதுதான். இது போக ஆவின் மாதிரியான கூட்டுறவு பால் பண்ணைகளுக்கு இந்த மாடு வைத்திருப்பவர்கள் பால் கறப்பார்கள். பீட்டாவின் கண்ணை ஊறுத்துவது இதுதான். இதிலென்ன இருக்கிறது உறுத்துவதற்கு? என்று உங்களுக்குத் தோன்றலாம். தமிழ்நாட்டில் மட்டும் இது போல் சிறு விவசாயிகள் மற்றும் மாடு வளர்ப்பவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் பால் உற்பத்தி சந்தையின் மதிப்பு ஒரு ஆண்டிற்கு எவ்வளவு தெரியுமா நண்பர்களே? மூன்றரை இலட்சம் கோடிகள்! சரி... இதற்கும் ஜல்லிக்கட்டுக்கும் என்ன தொடர்பு? இருக்கிறது, கோவில் மாடு என்ற ஒரு விஷயம் நம்ம ஊரில் உண்டு. அந்த மாடு வருடம் முழுதும் ஊர் சுற்றிக் கொண்டு ஜாலியாக இருக்கும். அந்த ஊரில் ஒரு முன்னூறு பசு மாடுகள் இருப்பதாக வைத்துக் கொண்டால் அத்தனை மாடுகளுக்கும் இனவிருத்தி செய்வது அந்த மாடுதான். இதுபோக ஜல்லிக்கட்டு விடுவதற்காக வளர்க்கப்படும் மாடுகளும் அந்த இனவிருத்தி வேலையைச் செய்யும். இந்த நாட்டு மாடுகள் அதிக பராமரிப்பு தேவைப்படாதவை. சிறிய அளவிலான மேய்ச்சல் அதற்கான உணவுத் தேவையை தீர்த்துவிடும். ஜல்லிக்கட்டில் விடப்படுவது இது போன்ற காயடிக்கப்படாத நாட்டுமாடுகள் தான். வட இந்தியா மற்றும் கர்நாடகாவில் நடைபெறும் மாட்டுவண்டிப் பந்தயங்களில் பயன்படுத்தப்படுவது எல்லாமும் காயடிக்கப்பட்ட மாடுகளே! எனவே தான் பீட்டா இந்த நாட்டுமாடுகளைக் குறிவைக்கிறது. இந்த மாட்டினத்தை முற்றிலும் அழிக்காவிட்டால் அவர்களால் கலப்பின மாடுகளை இங்கே இறக்கமுடியாது. கலப்பின மாடுகளுக்கு மேய்ச்சல் உணவு போதாது. அதற்கு தீவனம் வைத்தாக வேண்டும். உலகின் மிகப் பெரிய மாட்டுத்தீவன மற்றும் ஊக்க மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனம் பீட்டாவின் பின்னணியில் இருக்கிறது என்பதே உண்மை. அவர்கள் கண்ணை தமிழகத்தின் மூன்றரை இலட்சம் கோடிகள் கொண்ட பால் உற்பத்தி சந்தை உறுத்திக்கொண்டே இருக்கிறது. ஜல்லிக்கட்டை நிறுத்தாவிட்டால் அவர்களால் இங்கே காலூன்றவே முடியாது. அதனால் தான் அவர்கள் இந்த வீரவிளையாட்டை மிருகவதை என்ற பெயரில் முடக்க தீவிரம் காட்டுகிறார்கள் ! நன்றி: www.manithan.com

பீட்டா அமைப்புக்கு எதிராக இங்கே மனு கொடுக்கலாம் It's time to put PETA down.Join the fight.Make your voice heard.Sign our petition and tell the IRS to cancel PETA's status as a tax-exempt animal shelter. www.petakillsanimals.com

                   

                   இப்படிக்கு                  

  அன்பன்

அ இராகவன்.

அன்பே சிவம் வணக்கம்.

தெய்வீக சித்தமார்க்கம் இணையதளத்திற்க்கு வருகை புரிந்த அன்பர்களுக்கும் இனி வருகை புரியும் அன்பர்களுக்கும் வணக்கம். இந்த சித்தமார்க்க இணயதளம் உலகமெங்கும் வசிக்கும் தமிழர்களுக்கும்,சித்தமார்க்கத்தின் மீது மிகுந்த பற்றுடையவர்களுக்கும்,தமிழ் மொழி அறிந்தவர்களுக்கும் சித்தர் வகுத்த பாதை மீது பக்திகொண்டவர்களுக்கும் இந்த சித்திரை திருநாளில் இந்த ”தெய்வீக சித்த மார்க்கம்” என்ற இந்த தமிழ் இணயதளத்தை அர்ப்பணிக்கின்றேன். இந்த தளத்தை பற்றி சில வார்த்தைகள் இத்தளத்தை பதினைந்து[15] பகுதிகளாக பிரித்து பதினைந்து பகுதிகளுக்கும் பதினைந்து விதமாக தலைப்புகள் கொடுத்து  ஒரு நாளைக்கு ஒரு தலைப்புக்கு புதிய விஷயங்களை கொடுக்க எத்தனித்துள்ளேன்.உதாரணமாக இன்று முதல் பகுதிக்கு ஒரு விஷயம் வருகிறது என்றால் இரண்டாவது நாள் இரண்டாவது தலைப்புக்கு மட்டும் ஒரு புதிய விஷயம் வரும். அந்த பதினைந்து விஷயங்கள் என்னென்ன? 1. முகப்பு 2.மாத இதழ் 3.முப்பு-குரு 4.வாதம் 5.வைத்தியம் 6.யோகம் 7.ஞானம் 8.சித்த மருத்துவ கலைக்களஞ்சியம் 9.சித்தர் நூல்கள் 10.சித்தர் பாடல்கள் 11.காய சுத்தி 12.காய கல்பம் 13.கய சித்தி 14.தியானம் 15.சமாதி இவைகள்தான் அந்த பதினைந்து தலைப்புகள். மேற்கண்ட பதினைந்து தலைப்புக்குண்டான விளக்கத்தை இனி பார்ப்போம். (1).முகப்பு இத்தளத்துக்குண்டான முன்னுரையாக வெளிவரும். (2).மாதஇதழ் ”தெய்வீக சித்த மார்க்கம்” என்ற மாத இதழ் இலவசமாக வெளி வரும். எப்படி எனில்,சித்திரை வெளி வந்த மாத இதழ் மூன்றாம் மாதம் இத்தளத்தில் வெளி வரும்,அதாவது சித்திரை மாத இதழ் ஆனி மாதமும்,வைகாசி மாத இதழ் ஆடியிலும் வெளி வரும். (3).முப்பு-குரு முப்பூவை பற்றி இத்தளத்தின் ஆசிரியரின் எண்ணங்களும்,சித்தர் பாடல்களின் மேற்கோள்களுடனும் வெளிவரும். (4).வாதம் இது இரசவாதம். . . இரசவேதம். . . என்றெல்லாம் அழைக்கப்படும் அணுமாற்ற வித்தையையும்,இரசவாதக்கலைகளைப்பற்றி முடிந்த வரை முன்வைக்கிறேன். இதை படித்தபின் மதி நுட்பத்துடன் தேறி வருவதும்,தேறாமல் போவதும் இறைவனின் சித்தம். (5).வைத்தியம் வைத்திய துறையில் எந்த விதமான பரிபாஷையும் ஒளிவு மறைவும் இன்றி வைத்திய குறிப்புகள், மருந்து செய்முறைகள், தீரும் நோய்கள், அதன் நுட்பங்கள் விளக்கப்படும். (6).யோகம் யோகத்தில் இராசயோகம்,ஹடயோகம்,வாசியோகம், என்று பல் வகைகள் உள்ளன. இவைகளைப்பற்றி சித்தபெருமக்கள்,யோகவான்கள் ஞானியரின் அனுபவங்களையும் சில செய்முறை பயிற்சிகளையும் முன்வைக்கப்படும். முன்பு நூல்களில் குறிப்பிட்டது போல் யோகபயிற்சிகள் யாவும்,யோக சித்திக்குண்டான மருந்துகளை அருந்தியப்பின் செய்யவேண்டிய பயிற்சியே தவிற வேறு ஒன்றுமில்லை. (7).ஞானம் இது ஞானத்தின் திறவுக்கோளாகும்.ஞானியரின் கருத்துக்களும் சிந்தனைகளும் இடம்பெறும். (8).சித்த மருத்துவ கலைக்களஞ்சியம் இது சித்த மருத்துவ கலைகஞ்சியம் சுமார் 3000 பக்கங்கள் கொண்ட நூலாகவும் அதன் தொகுதி தொகுதியகவும் வெளி வரும். (9).சித்தர் நூல்கள் இது வரை நமக்கு கிடைத்திருக்கும் சித்தர்களின் நூல்களின் தலைப்புகள் வெளி வரும். பதிப்பகங்ள் வெளியிட்ட சித்தர்நூல்களின் விலைப்பட்டியல் ,எந்த நூல் எங்கு கிடைக்கும்? அதன் விலை என்ன...என்பது போன்ற செய்திகள் வெளி வரும். (10).சித்தர் பாடல்கள் இது ஒலித்தட்டு அது பாடும் பணியில் உள்ளது. (11).காய சுத்தி உடம்பை கல்பதேகமாக மாற்றுவதற்கு உடலை எவ்வறு சுத்தி செய்து வைத்துக்கொள்ளவேண்டும் ,என்பனவற்றை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும். (12).காய கல்பம் காய சுத்திக்குப் பின்இவ்வுடலை எப்படி காய சித்திக்கு தயார் படுத்துவது?உடல் கல்ப தேகமாக்ஜ இருந்தால்தான் காயசித்திக்கு தகுதி உடையதாகும் என்ற விழிப்புணர்வை தருவது. (13).காய சித்தி கல்ப தேகியானப்பின் தேகத்தை காயசித்திக்கு எப்படி தன்னை தயார் படுத்திக் கொள்வது என்று சித்தர்கள் கூறும் வழிகளை பற்றி விளக்குவதாகும். (14).தியானம் மேற்கண்ட விஷயங்களை பழகும் முன் மனம் ஒருமைப்பட்ட வெறுமையை அடைவது என்பதை பற்றியும் விளக்குவதாகும். (15).சமாதி சமாதி யோகத்தை சித்தாந்தம் என்ன சொல்கிறது?வேதந்தம் என்ன சொல்கிறது?இதில் எது சரியானது? என்ற கேள்விக்கு விடைத்தேடி அதை அடைவதாகும். இப்படி பதினைந்து தலைப்புக்கும்,தினம் ஒரு தலைப்புக்கு  தினம் ஒரு புதிய விஷயம் வரும்,என்பதை தெரிவித்துக்கொண்டு அடியேனின் நூல்களான.. (1).சித்தர்களின் பிரணவ சூத்திரம் முப்பூ-1 (2).சித்தர்களின் பிரணவ சூத்திரம் முப்பூ குரு-2 (3).பன்னிரு காண்டம் - 200 (4).பரிபாசை -300 (5).இலவச வெளியீடான போகர் ஏழாயிரத்தில் முப்பு என்ற ஐந்து நூல்களுக்கும் ஆதரவு கொடுத்ததுப் போல் இந்த சித்தமார்க்கம் இணையதளத்திற்கு வருகைப் புரிந்து மேலும் ஆதரவை கொடுக்குமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேண். அன்பேசிவம்.                    

விஜய வருட வேண்டுதல்

வைகறை பொழுது கதிர் பிளந்து
விடியலை தந்தது சித்திரையாம்
மை விழி கறையுது.கணல்தாங்க
முடியாதம்மா நீயெழுந்து
ஐயிரு திங்கள் சூல்கொண்டு
ஐயுராவண்ணம் மழைபொழிந்து
பயிர்களும் பார்புகழ் மாந்தரெல்லாம்
பொழியும் மழையில்நழையட்டுமே!


நித்திரை கொள்வது சத்தியமா?
நினைக்கவும் நெஞ்சம் துடிதுடிக்க
சித்திரை விஜயம் வாழ்த்துரைக்க
சிதிலத்தில் என் மனம் வெடித்திருக்க
எத்திரை மறைத்தது உன்விழியை
எடுத்துரைத்திடவும் முடியவில்லை
அத்திரை அகத்திரை விலகிடவே
அருணன் வந்தான் ஒளியுடனே!


ஒளியுடன் மனமது காத்திருக்க
மௌனசிரிப்பொலி இசைந்திருக்க
ஒளியுடன் கண்கள் சிவந்திருக்க
வாழ்த்துரைத்தாயே!வணங்குகிறேன்
ஒளிபிறந்தாளும் சின்மயமே!
ஓங்கிவளர்ந்த சகஸ்ரதலமே!
ஒளியே மழையாய் அமுதொழுக
எல்லா வளமும் பார்பெறுக!


கீழ்திசை கிழதிசை என்பதனால்
கிழக்கு என்றொரு காரணமோ?
கிழ திசை கடல்நீர் கொதிதெழுந்து
கீழ்திசை மேகம் சூல்கொண்டு
மழையாய் மண்ணை குளிர்வித்து
மக்களின் தாகத்தை தீர்க்கவந்து
மழைவளம் மண்வளம் பூமிக்கும்
நீர்வளம் வேண்டி வணங்குகிறேன்!

தெய்வீகசித்தமார்க்க தமிழ் இணையதளத்தின்

விஜய வருட
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


கர வருட வாழ்த்துக்கள்!


சித்திரையில்  ஒரு
முத்திரையைத் தர
வந்ததுவோ  கர
வருடம்

 

சித்தர்களின்    முதிர்
தத்துவத்தை       எதிர்
கொள்ள வருமே புது
வடிவம்


புத்தொளியில் மனம்
சத்தமின்றி         தினம்
சித்தொளியில் கணம்
வியக்கும்

 


நித்திரையை விடு
இலச்சியத்தை எடு
சத்தியத்தை தொட
வாழியவே...!
 

இனிய பக்தி பாடல்கள்,
பக்தி சொற் பொழிவுகள்,
பக்தி திரைப்படங்கள்,
கர்நாடக இசை
போன்றவைகளை
காணொளியில்
கண்டு கேட்டு மகிழுங்கள்

சித்தர் பாடல்கள்

பக்தி பாடல்கள்

ஆன்மீக சொற்பொழிவுகள்

பக்தி திரைப்படங்கள்

கர்நாடக இசை

இணைய வானொலி


 April 13th, 2018 அன்று புதிய பதிவுடன்
©-2019 - தெய்வீக சித்தமார்க்கம்