விஜய வருட வேண்டுதல்

வைகறை பொழுது கதிர் பிளந்து
விடியலை தந்தது சித்திரையாம்
மை விழி கறையுது.கணல்தாங்க
முடியாதம்மா நீயெழுந்து
ஐயிரு திங்கள் சூல்கொண்டு
ஐயுராவண்ணம் மழைபொழிந்து
பயிர்களும் பார்புகழ் மாந்தரெல்லாம்
பொழியும் மழையில்நழையட்டுமே!


நித்திரை கொள்வது சத்தியமா?
நினைக்கவும் நெஞ்சம் துடிதுடிக்க
சித்திரை விஜயம் வாழ்த்துரைக்க
சிதிலத்தில் என் மனம் வெடித்திருக்க
எத்திரை மறைத்தது உன்விழியை
எடுத்துரைத்திடவும் முடியவில்லை
அத்திரை அகத்திரை விலகிடவே
அருணன் வந்தான் ஒளியுடனே!


ஒளியுடன் மனமது காத்திருக்க
மௌனசிரிப்பொலி இசைந்திருக்க
ஒளியுடன் கண்கள் சிவந்திருக்க
வாழ்த்துரைத்தாயே!வணங்குகிறேன்
ஒளிபிறந்தாளும் சின்மயமே!
ஓங்கிவளர்ந்த சகஸ்ரதலமே!
ஒளியே மழையாய் அமுதொழுக
எல்லா வளமும் பார்பெறுக!


கீழ்திசை கிழதிசை என்பதனால்
கிழக்கு என்றொரு காரணமோ?
கிழ திசை கடல்நீர் கொதிதெழுந்து
கீழ்திசை மேகம் சூல்கொண்டு
மழையாய் மண்ணை குளிர்வித்து
மக்களின் தாகத்தை தீர்க்கவந்து
மழைவளம் மண்வளம் பூமிக்கும்
நீர்வளம் வேண்டி வணங்குகிறேன்!

தெய்வீகசித்தமார்க்க தமிழ் இணையதளத்தின்

விஜய வருட
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


அன்பே சிவம் வணக்கம்.

தெய்வீக சித்தமார்க்கம் இணையதளத்திற்க்கு வருகை புரிந்த அன்பர்களுக்கும் இனி வருகை புரியும் அன்பர்களுக்கும் வணக்கம். இந்த சித்தமார்க்க இணயதளம் உலகமெங்கும் வசிக்கும் தமிழர்களுக்கும்,சித்தமார்க்கத்தின் மீது மிகுந்த பற்றுடையவர்களுக்கும்,தமிழ் மொழி அறிந்தவர்களுக்கும் சித்தர் வகுத்த பாதை மீது பக்திகொண்டவர்களுக்கும் இந்த சித்திரை திருநாளில் இந்த ”தெய்வீக சித்த மார்க்கம்” என்ற இந்த தமிழ் இணயதளத்தை அர்ப்பணிக்கின்றேன். இந்த தளத்தை பற்றி சில வார்த்தைகள் இத்தளத்தை பதினைந்து[15] பகுதிகளாக பிரித்து பதினைந்து பகுதிகளுக்கும் பதினைந்து விதமாக தலைப்புகள் கொடுத்து  ஒரு நாளைக்கு ஒரு தலைப்புக்கு புதிய விஷயங்களை கொடுக்க எத்தனித்துள்ளேன்.உதாரணமாக இன்று முதல் பகுதிக்கு ஒரு விஷயம் வருகிறது என்றால் இரண்டாவது நாள் இரண்டாவது தலைப்புக்கு மட்டும் ஒரு புதிய விஷயம் வரும். அந்த பதினைந்து விஷயங்கள் என்னென்ன? 1. முகப்பு 2.மாத இதழ் 3.முப்பு-குரு 4.வாதம் 5.வைத்தியம் 6.யோகம் 7.ஞானம் 8.சித்த மருத்துவ கலைக்களஞ்சியம் 9.சித்தர் நூல்கள் 10.சித்தர் பாடல்கள் 11.காய சுத்தி 12.காய கல்பம் 13.கய சித்தி 14.தியானம் 15.சமாதி இவைகள்தான் அந்த பதினைந்து தலைப்புகள். மேற்கண்ட பதினைந்து தலைப்புக்குண்டான விளக்கத்தை இனி பார்ப்போம். (1).முகப்பு இத்தளத்துக்குண்டான முன்னுரையாக வெளிவரும். (2).மாதஇதழ் ”தெய்வீக சித்த மார்க்கம்” என்ற மாத இதழ் இலவசமாக வெளி வரும். எப்படி எனில்,சித்திரை வெளி வந்த மாத இதழ் மூன்றாம் மாதம் இத்தளத்தில் வெளி வரும்,அதாவது சித்திரை மாத இதழ் ஆனி மாதமும்,வைகாசி மாத இதழ் ஆடியிலும் வெளி வரும். (3).முப்பு-குரு முப்பூவை பற்றி இத்தளத்தின் ஆசிரியரின் எண்ணங்களும்,சித்தர் பாடல்களின் மேற்கோள்களுடனும் வெளிவரும். (4).வாதம் இது இரசவாதம். . . இரசவேதம். . . என்றெல்லாம் அழைக்கப்படும் அணுமாற்ற வித்தையையும்,இரசவாதக்கலைகளைப்பற்றி முடிந்த வரை முன்வைக்கிறேன். இதை படித்தபின் மதி நுட்பத்துடன் தேறி வருவதும்,தேறாமல் போவதும் இறைவனின் சித்தம். (5).வைத்தியம் வைத்திய துறையில் எந்த விதமான பரிபாஷையும் ஒளிவு மறைவும் இன்றி வைத்திய குறிப்புகள், மருந்து செய்முறைகள், தீரும் நோய்கள், அதன் நுட்பங்கள் விளக்கப்படும். (6).யோகம் யோகத்தில் இராசயோகம்,ஹடயோகம்,வாசியோகம், என்று பல் வகைகள் உள்ளன. இவைகளைப்பற்றி சித்தபெருமக்கள்,யோகவான்கள் ஞானியரின் அனுபவங்களையும் சில செய்முறை பயிற்சிகளையும் முன்வைக்கப்படும். முன்பு நூல்களில் குறிப்பிட்டது போல் யோகபயிற்சிகள் யாவும்,யோக சித்திக்குண்டான மருந்துகளை அருந்தியப்பின் செய்யவேண்டிய பயிற்சியே தவிற வேறு ஒன்றுமில்லை. (7).ஞானம் இது ஞானத்தின் திறவுக்கோளாகும்.ஞானியரின் கருத்துக்களும் சிந்தனைகளும் இடம்பெறும். (8).சித்த மருத்துவ கலைக்களஞ்சியம் இது சித்த மருத்துவ கலைகஞ்சியம் சுமார் 3000 பக்கங்கள் கொண்ட நூலாகவும் அதன் தொகுதி தொகுதியகவும் வெளி வரும். (9).சித்தர் நூல்கள் இது வரை நமக்கு கிடைத்திருக்கும் சித்தர்களின் நூல்களின் தலைப்புகள் வெளி வரும். பதிப்பகங்ள் வெளியிட்ட சித்தர்நூல்களின் விலைப்பட்டியல் ,எந்த நூல் எங்கு கிடைக்கும்? அதன் விலை என்ன...என்பது போன்ற செய்திகள் வெளி வரும். (10).சித்தர் பாடல்கள் இது ஒலித்தட்டு அது பாடும் பணியில் உள்ளது. (11).காய சுத்தி உடம்பை கல்பதேகமாக மாற்றுவதற்கு உடலை எவ்வறு சுத்தி செய்து வைத்துக்கொள்ளவேண்டும் ,என்பனவற்றை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும். (12).காய கல்பம் காய சுத்திக்குப் பின்இவ்வுடலை எப்படி காய சித்திக்கு தயார் படுத்துவது?உடல் கல்ப தேகமாக்ஜ இருந்தால்தான் காயசித்திக்கு தகுதி உடையதாகும் என்ற விழிப்புணர்வை தருவது. (13).காய சித்தி கல்ப தேகியானப்பின் தேகத்தை காயசித்திக்கு எப்படி தன்னை தயார் படுத்திக் கொள்வது என்று சித்தர்கள் கூறும் வழிகளை பற்றி விளக்குவதாகும். (14).தியானம் மேற்கண்ட விஷயங்களை பழகும் முன் மனம் ஒருமைப்பட்ட வெறுமையை அடைவது என்பதை பற்றியும் விளக்குவதாகும். (15).சமாதி சமாதி யோகத்தை சித்தாந்தம் என்ன சொல்கிறது?வேதந்தம் என்ன சொல்கிறது?இதில் எது சரியானது? என்ற கேள்விக்கு விடைத்தேடி அதை அடைவதாகும். இப்படி பதினைந்து தலைப்புக்கும்,தினம் ஒரு தலைப்புக்கு  தினம் ஒரு புதிய விஷயம் வரும்,என்பதை தெரிவித்துக்கொண்டு அடியேனின் நூல்களான.. (1).சித்தர்களின் பிரணவ சூத்திரம் முப்பூ-1 (2).சித்தர்களின் பிரணவ சூத்திரம் முப்பூ குரு-2 (3).பன்னிரு காண்டம் - 200 (4).பரிபாசை -300 (5).இலவச வெளியீடான போகர் ஏழாயிரத்தில் முப்பு என்ற ஐந்து நூல்களுக்கும் ஆதரவு கொடுத்ததுப் போல் இந்த சித்தமார்க்கம் இணையதளத்திற்கு வருகைப் புரிந்து மேலும் ஆதரவை கொடுக்குமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேண். அன்பேசிவம்.                     

                   இப்படிக்கு                   

  அன்பன்

அ இராகவன்.

முந்தய பதிவுகள்


 February 7th, 2014 அன்று திருத்தப்பட்டது
©-2016 - தெய்வீக சித்தமார்க்கம்